பக்கம் எண் :

மூலமும் உரையும்193

வேட்டிருக்கத் திண்ணனார் வேட்டம்போய்க் கொண்டுவரும்
சூட்டிறைச்சி தோயாச் சுவைச்சிறுதேன் - நாட்டியத்தர்
தண்டா மரையடிசேர் சங்கத்தோன் அந்தாதி
அண்டா முழுச்சிற் றலங்காரம் - தொண்டாகித்
வண்கைப் புகுதா மருக்கொழுந்து’

எனப், பேதைப் பெண்ணின் பெருஞ்சிறப்பைக் குறிக்கத் திருக்காளத்தி நாதருலா ஆசிரியர், அத்தலத்து நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பானன்றி வேறொரு சிறப்பான் தோன்றியதாக அமைத்த அழகு ஒவியத்தோடொப்ப இங்கேயும் ‘வேலை பெறா அமுதம்’ என்றாரென்க. திரு-செல்வம் செல்வமாக அருமையாகத் தோன்றிய வீமனுக்கு மகள் எனக் கொள்க.

1‘நல்கூர்ந்தார் செல்வமகள்’

என்றார், கலித்தொகையினம். அதற்குப் பிள்ளையான் மிடிப்பட்டாருடைய செல்வத்தையுடைய மகள் என உரைகண்டனர், நச்சினார்கினியர். வானாடராக இருந்தும், செயற்கரிய செயலெல்லாம் ஆற்றும் பண்புடையராக இருந்தும், தமயந்தி மணமாலைக்கு ஏக்கற்றிருந்து சென்றாராகலான், அவ்விழிவு தோன்ற ‘மாலை பெறாதகலும் வானாடர்’ என்றார். கற்றோராயினும் மற்றோராயினும் செல்வராயினும் அல்லராயினும் அவர்களைப் பற்றித் துன்புறுத்தி அவர்தம் பீடழியச் செய்யும் திறலுடையனாகலின், கலிக்குப் ‘புன்னெறியிலாக்கும் இருங்கலி’ என்ற அடைகொடுத்து மொழிந்தார். எதிர்கண்டார் - நேரில் கண்டார். வானாடர் என்றது, சுயம்வரத்துக்கு வந்திருந்த இந்திரன் அக்கினி வருணன் எமன் இவர்களையே குறித்தலால் ஒன்றொழிபொதுச் சொல். புல்நெறி - புல்லிய வழி : கீழ்மையான செயல்களில் தலைப்படச் செய்தல் எனக் கலிக்கு ஆற்றல் மிகுதி தோன்றப் புலப்படுத்தியதாகக் கொள்க. (157)

கலி, இந்திரன் கேட்டதற்கு, ‘நான் தமயந்தியை
மணந்துகொள்ள வருகிறேன்’ என்றான் எனல்

165. ஈங்குவர வென்னென் றிமையவர்தம் கோன்வினவத்
தீங்கு தருகலியும் செப்பினான் - நீங்கள்
விருப்பன வீமன் திருமடந்தை யோடும்
இருப்பான் வருகின்றேன் யான்.

1. கலித்தொகை : 50.
ந. - 13