பக்கம் எண் :

மூலமும் உரையும்195

வதனக் கன்னி மணமாலை கைக்கொண்டான் - நிறைநிலவையொத்த அழகு பொருந்திய முகத்தாளாகிய தமயந்தியின் சுயம்வர மணம் பொருந்திய மலர்மாலையைப் பெற்றான், உன்னுடைய உள்ளக்கருத்தை ஒழித்து ஏகுதி என்றான் - (ஆதலால்) உனது மனத்திற்கொண்டுள்ள ஆசையை இனி மாற்றிக்கொண்டு திரும்பிச் செவ்வாயாக என்று (கலிமகனைப் பார்த்து) மொழிந்தான்.

(க - து.) இந்திரன், கலிமகனைப் பார்த்து, ‘அரசர்களில் நளமன்னனுக்கே தமயந்தி சுயம்வர மணமாலை கிட்டிற்று ; ஆதலால், நீ தமயந்திமேற் கொண்டுள்ள ஆசையை விட்டுவிட்டுத் திரும்பிச் செல்வாயாக’ என்று கூறினான் என்பதாம்.

(வி - ரை.) வைவேல் நளன் - கூர்மைபொருந்திய வேற் படையையுடைய நளமன்னன் என்றது, படைவீரத்தாற் சிறந்தவனென்று குறித்தற்கு. மதிவதனம்: உவமைத் தொகை. கன்னி - கட்டழகுடையவள். கைக்கொள்ளுதல் - உரிமையாகப் பெறுதல். உள்ளக்கருத்து, கலிமகன் தமயந்தியை மணந்துகொள்ள விரும்பியிருக்கும் கோட்பாடு. வெள்ளைத் தனியானை - வெண்ணிறம் பொருந்திய ஒப்பற்ற யானை. தேவேந்திரன்பாலுள்ள யானை, மற்ற யானைகளினும் உருவத்தானும் நிறத்தானும் வெற்றி முதலியவற்றானும் சிறந்ததாகலான் ‘தனியானை’ என்றார். இவ்யானை சிறந்ததென்பதை 1‘யானைக் கமரர் உம்பல்’ என்றார் பிறரும். அதைத் தனக்குப் பெற்றிருக்கும் பேறுடையனாகலானும் மற்றச் செல்வ வளத்திலும் இச் செல்வங்கிட்டாத பெருஞ் செல்வமாக இருத்தலானும் இதனைப் பெற்றவன் என்பாராய்த் ‘தனியானை வேந்து’ எனச் சிறப்பித்துக் கூறினார். வேந்து, அரசு, அமைச்சு என்பனபோல் உயர்திணையைக் குறித்து நின்ற பண்புச் சொல். (159)

கலிமன்னன், சினங்கொண்டு சூளுரைத்தல்

167. விண்ணரசர் நிற்க வெறித்தேன் மணமாலை
மண்ணரசர்க் கீந்த மடமாதின் - எண்ணம்
கெடுக்கின்றேன் மற்றவள்தன கேள்வனுக்கும் கீழ்மை
கொடுக்கின்றேன் என்றான் கொதித்து.

1. திருவள்ளுவமாலை :