|
இவ்வாறே சூரியன் தோற்றத்தை
இளங்கோவடிகள் சிலப்பதிகாரப்
பெருங்காப்பியத்தில்,
1‘வேலை மடற்றாழை உட்பொதிந்த
வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைத்
துளிநறவந் தாதூதத் தோன்றிற்றே காமர்த்
தெளிநிற வெங்கதிரோன் தேர்’
என்று கூறியதும் இதனோடு ஒத்த
கருத்தாதலை உணர்க வெண்குமுதம் செங்குமுதம் என
அல்லி இருவகைய. ஆயினும் செவ்வல்லி
தோற்றத்தால் சிறந்திருத்தலின், அதனைமட்டும்
கூறினும் இரண்டுக்கும் கொள்க என்னை ?
‘2ஒருமொழி யொழி தன் இனங்கொளற்
குரித்தே’
என்பது விதியாகலான்.
சோற்றையுண்டான் என்னும்போது அதனுடன் சார்ந்த
கறி குழம்பையும் உண்டானென்று கொள்ளப்படுதல்
போல. (163)
தோழியர், தமயந்திக்கு அணிகள்
அணிந்து அழகுறுத்தல்
171. இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற
பொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்
சூட்டினார் சூட்டித் துடிசேர் இடையாளைப்
பூட்டினார் மின்னிமைக்கும் பூண்.
(இ - ள்.) இன் உயிர்க்கு இளமுறுவலே
நேர் என்கின்ற - (ஆடவர்தம்) இனிய உயிர்க்கு
ஒத்தது இவளின் புன்னகை ஒன்றே என்று கூறுகின்ற,
பொன் அழகை தாமே புதைப்பார் போல் -
(வண்ணமகளிர்) திருமகளனைய தமயந்தியின் அழகை
(அழகுபடுத்தற்குரியரான) தாங்களே மறைப்பார்போல,
துடிசேர் இடையாளை - உடுக்கையின் நடுஇடம் போல்
வடிவம் பொருந்தி மிளிர்கின்ற இடையையுடைய
தமயந்திக்கு, மென் மலரும் சூட்டினார் - மெல்லிய
மலர்மாலையும் (பிற பொன்மாலை முதலியனவும்)
அணிவித்தனர், சூட்டி (அவ்வா) றணிவித்தபின், மின்
இமைக்கும் பூண்பூட்டினார் - ஒளிவிடுகின்ற (பல்வகை)
அணிகளையும் அணிந்தார்கள்.
(க - து.) ஆடவர், ‘தம் உயிரை
யொத்தது இவள் தன் புன்னகை யொன்றே’ என்று
போற்றுகின்ற தயமந்
1. சிலப்பதி. 6 : இறுதி வெண்பா. 2.
நன்னூல் : 358.
|