பக்கம் எண் :

மூலமும் உரையும்201

திக்கு வண்ணமகளிர் அழகை மறைப்பார் போன்று பல்வகை அணிகள் அணிந்தார்கள் என்பதாம்.

(வி - ரை.) ஆடவர் தமயந்தியின் புன்சிரிப்பொன்றே தம் உயிரை யொத்ததென்று பாராட்டுவார்களாயின், அவள் தன் ஏனைய உறுப்புகளின் அழகு சொல்லவேண்டாதாயிற்று. அதனால் அவர்க்கு ஏனைய உறுப்புக்களின் மேற்கொண்டுள்ள ஆராக்காதல் அறையவேண்டுவதின்றெனக் குறித்தவாறாம். ‘1ஆடவர் அவாவின தளவே’ என்றார் பிறரும் 2‘பாகு பொதி பவளம் திறந்து நிலாஉதவிய, நாகிள முகத்தின் நகைநலம்’ என்றார், இளமுறுவற் சிறப்பை இளங்கோவடிகளாரும்.

பொன் - திருமகள் : அவள் போன்றாளைக் குறித்தலால் உவம ஆகு பெயர். முன்பும், ‘பூந்தார மெல்லோதிப் பொன்’ என்றதூஉம் காண்க. அவள்தன் இயற்கை அழகே கண்டார் நெஞ்சைக் கனிவிக்கும் தன்மையது. பெண்களும் ஆண்மையை விரும்பும் பேரழகினாள் ; அவட்குச் செயற்கை முறையில் அணிகள் அணிதல் அவள்தன் இயற்கையழகை வெளிக்காட்டாது மறைப்பது போன்றிருத்தலின், ‘தாமே புதைப்பார் போல்’ என்றார். இவ்வாறே கம்பநாடரும் சீதையின் திருமணத்துக்கு வண்ணமகளிர் அவட்கு மேலும் வனப்புறுத்த அணிகள் பல அணிவித்தபோது, ‘அவள் தன் மேனியழகு மறைவதை அறியாராய், அமிழ்தைச் சுவைப்படுத்துவார்போல் அழகினுக்கு அழகு செய்வதானார். அதனால் இப்பேருலகம் அறியாமை நிரம்பியது ! என்னே உலகியல் ! இஃதோ’ வென்று வியப்பும் நயப்பும் தோன்றக் கூறினார். அது :

3அமிழிமைத் துணைகள் கண்ணுக்

கணியென அமைக்கு மாபோல்

உமிழ்சுடர்க் கலன்கள் நங்கை

உருவினை மறைப்ப தோரார்

அமிழ்தினைச் சுவைசெய் தென்ன

அழகினுக் கழகு செய்தார்

இமிழ்திரைப் பரவை ஞாலம்

ஏழைமை உடைத்து மாதோ’

என்பதாம். மங்கல வினைகட்கு முதன்மையானது மலர்மாலை ஆதலால், அதனை முதலில் வைத்து ‘மென்மலரும் சூட்டினார்’

1. நைடதம், அன்.....தூது : 22. 2. சிலப், 8 : 80 - 1.
3. கம்பரா. கோலங் : 3.