பக்கம் எண் :

206நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

என்று காதலர் வியந்துகூறுதல் இயல்பாகலான், இருவரும் ஒன்றுகலந்தன ரென்க. (167)

தமயந்தி, நளனுடன் கலவிப்போர் புரிந்தாள் எனல்

175. குழைமேலும் கோமான் உயிர்மேலும் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள - விழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்
வல்லோடும் கொங்கை மடுத்து.

(இ - ள்.) குழைமேலும் கோமான் உயிர்மேலும் - (தமயந்தியானவள்) தன் காதுகளின்மீதும் நளமன்னன் உயிரின்மீதும், கூந்தல் மழைமேலும் - தன் கூந்தலாகிய மேகத்தின் மீதும், வாள் ஒடி மீள - தன் கண்ணாகிய வாளானவை விரைந்து சென்ற திரும்ப, அல்லோடும் வேலான் அகலத்தொடும் - ஒளி வீசி இருளை ஓட்டுகின்ற வேலேந்திய நளமன்னனுடைய மார்போடு, வல் ஓடும் கொங்கைமடுத்து - சூதாடும் காய்கள் தோற்றோடுகின்ற அழகுபொருந்திய கொங்கைகளைக் கொண்டு தாக்கி, விழைமேலே பொருதாள் - விருப்பம் மிகுதிப்படக் காதலாற் கலவிப் போர் செய்தாள்.

(க - து.) தமயந்தியின் கண்கள் தன் காது, நளன் உயிர், தன் கூந்தல் இவைகளுள் சென்று மீளத் தன் காதல் விருப்ப மிகுதியால் நளன் மார்போடு தன் கொங்கைகள் அழுந்தப் போர்தொடுத்தாள் என்பதாம்.

(வி - ரை.) தமயந்தி தன் காதற் கணவனாகிய நளன் மேற் கொண்ட ஆரா அயராக் காதலினால் தன் கண்களால் அவனுடைய மார்பு தோள் முகம் முதலிய அழகைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவண்ணமாக இருந்தாள் என்பதைக் குறிக்க ‘வாளோடி மீள’ என்றார். வாள் போன்ற கண்களை வாள் என்றது ஆகுபெயர். கடைக்கண்ணால் நளனழகுருவைப் பார்க்குங்கால், கண்கள் காதளவுவரை செல்லுமாதலின், ‘குழைமேலும்’ என்றார். அவள் பார்க்குங்கால் நளன் உயிர் மகிழ்வுகொண்டு மேலும் மேலும் அறிதோற்றியாமை கண்டாற்போன்று தமயந்தி மேல் காதல் பொங்கிப் பொங்கித் ததும்பலின், ‘கோமான் உயிர் மேலும்’ என்றார். கண்ணை மேலோட விழித்துப் பார்த்தபோது கண் நெற்றிவரை உயர்ந்துபோதலின் ‘கூந்தல் மழை மேலும்’ என்றார். கண்ணை மட்டும் ஈண்டுக் கூறினாராயினும் காதலாற் பிணிப்புண்டு காதலின்பந்துய்ப்பார்க்கு கண்டும் கேட்டும்