பக்கம் எண் :

மூலமும் உரையும்207

உண்டும் உயிர்த்தும் தொட்டும் இன்புறுதல் இயற்கையாதலால் அவைகளையுங் கொள்க. அகலம் - மார்பு. பொருதல் - தாக்குதல் ; மோதுதல், ஈண்டு விட்டுவிட்டுத் தழுவுதல். வல் - சூதாடு கருவி. இதனைத் தற்காலத்தில் நாயென்பார். சொற்கேட்டான் என்னும் சூது விளையாட்டிற்குக் கட்டங்களில் வைத்தாடுவது பம்பரம் போன்று மேல்பாகம் சிறுத்தும் அடிப்பாகம் பெருந்துமிருத்தல் தன்மையினால் அஃது கொங்கைகட்கு உவமையாயிற்று. அஃது ஓடுதல், அதன் அழகு இதற்கு ஒவ்வாதிருத்தல். அதனை இதைக்கண்டு அஞ்சி ஓடுதலாகக் குறித்து இதன் ஏற்றத்தை உணர்த்தினார். இதில் தமயந்தி செய்த கலவியின்பத்தைக் கூறியவாறு. அல்லோடும் - இரவை ஓட்டும் : பிறவினை. (168)

தமயந்தியின் காதலாகிய ஆறு பாய்தலால் நளன் மார்பில்
குங்குமம் படிந்ததெனல்

176. விரனக லச்செறுவின் மீதோடிக் குங்குமத்தின்
ஈர இளவண்டல் இட்டதே - நேர்பொருத
காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதல்எனும்
ஓராறு பாய உடைந்து.

(இ - ள்.) நேர் பொருத - நேரில் புணர்ந்து கலவிப் போர் செய்த, கார் ஆரும் மெல் ஓதி - கரியநிறம் பொருந்திய மெல்லிய கூந்தலையுடைய, கன்னி அவள் காதல் எனும் - கட்டழகுடையவளாகிய தமயந்தியின் காதலென்கின்ற, ஓர் ஆறு பாய - பெரிய ஆறு பாய்ந்தோடுதலால், உடைந்து வீரன் அகலச் செறுவின்மீது ஓடி - மடைதிறந்து போர்வீரனாகிய நளமன்னனது மார்பாகிய வயலின்மேல்: (வெள்ளம்) பெருகியோடி, குங்குமத்தின் ஈர இளவண்டல் இட்டது - குங்குமச் சாந்தின் குளிர்ச்சி பொருந்திய மெல்லிய வண்டலை உண்டாக்கிற்று.

(க - து.) தமயந்தியின் காதலென்னும் பேராறு பாய்ந்து நளமன்னன் மார்பென்னும் வயலிற் பெருக்கெடுத்துச் செல்வதால் அங்கே குங்குமக் குழம்பின் மெல்லிய வண்டல் படிந்து நின்றது.

(வி - ரை.) வீரன் : 1‘காலனும் காலம் பார்க்கு பாராது வேலீண்டு தானை விழுமியோர்,

1. புறம் : 41.