பக்கம் எண் :

மூலமும் உரையும்221

(வி - ரை.) கொடும் + கை - கொடு: கோடு - வளைதல் அஃதாவது உள்ளங்கை குவித்தல். அணைத்தல் - ஒன்று சேர்த்தல். ஒரு தலைவன், தன் காதலிக்கு மலர்பறித்துக்கொணர்ந்து அவள் கூந்தலிற் சூட்டி மகிழ எண்ணிக்கொண்டு போந்தான். போந்தவன் அவள் அழகையெல்லாம் உற்றுப்பார்த்தான்; அவைகளுள் அவள் இடை, கூந்தற் பொறையும் கொங்கைப் பாரமும் தாங்கலாற்றாது மிக மெலிந்து நுடங்குதலைக் கண்டான்; கண்டு, ‘1தாமே தளர்பவரைப் பாரம் ஏற்றுதல் தக்க தன்றே’ என்னும் எண்ணம் மேலிட, இடை முறியுமென்று கண்டு அஞ்சி அவள் காலிலணிந்து மகிழ்ந்தான் என்னும் கருத்தை உட்கொண்டுள்ளது இப்பாட்டு.

திருவள்ளுவர் தந்த காதலன், தன் காதலி பூக்களின் காம்புகளைக் களையாமல் சூடியதற்கு, ‘அவள் இடை தாங்காமல் முறியுமே ! என்னாங்கொல் ! இனி இறந்துபடுவளே ! அதற்காகச் சாப்பறையன்றோ முழங்கும் ! என் செய்வேன் ! இவள் தன்நிலைக் கொவ்வாததைச் செய்தனளே !’ என, வருந்துவதாகக் காட்டுகின்றார். அக்கருத்தோடொத்ததே இப்பாடலும். எனவே, அவ் வள்ளுவர் காட்டும் பாவையையும் இங்கே காண்க:

2‘அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை’

என்பது அது. பாத + அரவிந்தம் = பாதாரவிந்தம் எனப் புணர்ந்தது. வடசொல் முடிவு: தீர்க்கசந்தி. ஆதாரம் - பற்றுக்கோடு. இடையின் நுட்பத்தை உணர்த்திற்று. (8)

நளன், தமயந்திக்கு மணல்மேடு
கலவிப் படுக்கைபோல் தோன்றுகின்றது எனக்கூறல்

187. ஏற்ற முலையார்க் கிளைஞர் இடும்புலவித்
தோற்ற அமளியெனத் தோற்றுமால் - காற்றசைப்ப
உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே
எக்கர் மணல்மேல் இசைந்து.

(இ - ள்.) காற்று அசைப்ப - காற்றடித்து அசைத்தலினால் உக்க மலரோடு வளை உகுத்த முத்தம் - உதிர்ந்த பூக்களுடன் சங்குகள் ஈன்ற முத்துக்கள், எக்கர் மணல்மேல் இசைந்து - வெள்ளநீர் ஒதுக்கிய மணல் மேட்டின்மேல் சேர்ந்து, ஏற்றம்

1. திருவிடை...மும் : 15. 2. திருக்குறள் : 1115.