|
முலையார்க்கு - உயர்ச்சி பொருந்திய
கொங்கையையுடைய பெண்களுக்கு, இளைஞர் இடும்புலவி
தோற்றம் அமளி என தோற்றும் - அவர்களின்
இளங்காதலர் இட்டுவைத்த ஊடற் குறிப்புள்ள
படுக்கைபோன்று தோன்றும்.
(க - து.) காற்றடித்தலால் உதிர்ந்த
மலர்களுடன் சங்குகள் ஈன்ற முத்துக்கள்
மணல்மேட்டின்மேல் கிடப்பன, ஊடல் தீர்த்தற்கு
காதலர், காதலிகட்கு விரித்தமைத்த
படுக்கைபோலத் தோன்றுகின்றது என்பதாம்.
(வி - ரை.) எக்கர்-மணல்மேடு. அங்கே
காற்றடிக்கின்றது; பக்கலில் உள்ள
மரங்களிலிருந்து மலர்கள் உதிர்கின்றன;
சங்கினங்கள் அம்மணல் மேட்டின்மேல் வந்து
முத்துக்களை ஈன்று விடுகின்றன. இவ்விரண்டும்
ஒன்றுகலந்து கிடப்பன, காதலர்களின்
மலர்ப்படுக்கைபோல் தோன்றுகின்றன.
பெண்களுக்குத் தம் கணவர்மீது கொள்கின்ற
சினத்தினால் படுக்கையில் தாம் அணிந்துள்ள
அணிகளையும், மலர்மாலை முதலியவைகளையும்
களைந்தெறிவராகலின், மணல்மேட்டில் கிடக்கும்
மலர்களும் முத்துக்களும் ஊடற்படுக்கை
போன்றிருந்ததென்றார். இவ்வாறே அவர்கள்
கழற்றித் தம் அணிகளை ஊடலால் எறிவரென்பதை
நைடத நூலாசிரியர்,
1‘கொல்லுலை வேற்கண் நல்லார்
கொழுநரோ டூடி நீத்த
வில்லுமிழ் கலன்கள் யாவும்
மிளிர்சுடர் எறிக்கும்’
என்றதூஉம், பாயலில் (படுக்கையில்)
முத்துக்களும் பூக்களும், சிதறிக்கிடக்குமென்பதை
இராமபிரான் கடலைக் கண்ட போது கடலில்
அலைகளால் முத்துக்களும் மலர்களும்
ஒதுக்கப்பட்டுக் கரையிற் சேர்ப்பதைத் திருமால்
அவதாரமாக இராமனைக் கொள்ளப்படுதலால்,
பாற்கடலிற் பள்ளிகொண்ட பெருமான்
நெடுநாட்பிரிந்து வாராமல் இருந்து வந்தபோது,
அவன் துயில்வோனாதலால் அவனுக்குப் பாயலுதறி
விரிப்பது போன்றிருப்பதாகக் கம்பர்
குறித்தார். அது :
2‘சேய காலம் பிரிந்தகலத்
திரிந்தான்
மீண்டும் சேக்கையின்பால்
மாயன் வந்தான் இனிவளர்வான் என்று
கருதி வருந்தென்றல்
1. நைடதம், நாட்டு : 27. 2. கம்பரா,
கடல்காண் : 4.
|