பக்கம் எண் :

224நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

போன்று சோலை, தன்னிடத்துள்ள மரக்கிளைகள் மலர்களை உதிர்த்து வாட்டமுற்றசைந்து அம்மலர்ப் பரப்பின் மேற்படுவது, அம் மகளிர்தம் தன்மைக்கு ஒப்பாக இருந்ததென உவமைகூறி, நளன் தமயந்திக்குக் காட்டினானென்க.

சோலையானது இலையும் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாக மிக அடர்ந்து அதனுள் ஞாயிற்றொளி நுழைதற்கியலாது இருண்டிருத்தலால் ‘அல்லென்ற சோலை’ என்றார். முன்னரும்,

‘தூங்கிருள் வெய்யோற்கொதுங்கிப்
புக்கிருந்தால் அன்ன பொழில்’

என்றதூஉம் காண்க.

1‘வெயில் நுழை பறியாக் குயில்நுழை பொதும்பர்’

என்றார் மணிமேகலையினும்.

அசைய என்னும் செயவெனெச்சம் அசைந்து எனத் திரிந்தது. புல்லென்ற கோலம் - தன் இயற்கையழகு சிறிது குறைவுற்றிருக்கும் தன்மை. பூவை - நாகணவாய்ப்புள். அதுபோன்று பேசுவோரைப் பூவையர் என்றது உவமையாகு பெயர். (10)

நளன், தமயந்திக்கு அல்லிப்பூவின் மலர்ச்சியைக்
காட்டிக் கூறுதல்

189. கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூக்-கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தல் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார்.

(இ - ள்.) கொங்கு அவிழ்தேன் வார்க்கின்ற கூந்தல் - மணங்கமழுகின்ற தேனைக் கொட்டுகின்ற (மலரணிந்த) கூந்தலையுடைய ஒரு பெண்ணானவள், (தான் தடாகத்தில் நீராடுகின்ற இப்போது) கொங்கை முகத்து அணையக் கூட்டி - தன் கொங்கைக்கண்களிற் சேரும்படி அணைத்துப் பிடித்து, கொடும் கையால் அங்கு அணைக்க - தன் வளைந்தகைகளினால் அவ்விடத்தே நன்றாய் அணைத்துக் கொண்டிருத்தலால், வாய் நெகிழ்ந்த ஆம்பல்பூ - தன் உள்ளிடம் மிக விரிந்த அல்லிமலரினது தோற்றம், முகத்தை மதி என்று பார்க்கின்றது என்னல்

1. மணிமேகலை, 4 : 5.