|
ஆம் பார் - அவளது முகத்தை நிறைந்த
நிலவென்று கருதிப் பார்ப்பதுபோல்
இருக்கின்றதென்று சொல்லும்படி காட்சி தருவதை நீ
பார்ப்பாயாக.
(க - து) நளன் தமயந்திக்குச்
சுட்டிக்காட்டிப் ‘பெண்ணொருத்தி, தன் கொங்கை
முகட்டில் ஆம்பல் மலரை அணைப்பதனால் அது மிக வாய்
விரிந்து இருக்கும் தோற்றம், அவள் முகத்தை
நிறைமதி யென்று கருதிப் பார்ப்பது
போன்றிருக்கின்ற தென்னும்படி இருப்பதைப் பார்’
என்றான் என்பதாம்.
(வி - ரை.) கொங்கை முகம் -
தனங்களின் மேலிடம். நீராடும் பெண்ணொருத்தி
ஆம்பல் மலரைப் பறித்துத் தன் மார்பில்
அணைத்துக்கொண்டாள். அம் மலர் மிகுதியாக
விரிந்து விட்டது. சந்திரனைக் கண்டால் ஆம்பல்
மொட்டுகளும், மலர்களும் மலர்வது இயற்கை. இவள்
முகம் திங்களை ஒப்ப இருத்தலால், அம்முகத்தைத்
திங்களெனக் கருதி மலர்வது போன்று இருப்பதாகத்
தோன்றுகின்றது. மலர் விரிதலைப் பார்த்தலாகக்
குறித்தார். கூந்தல்: இங்கு ஆகு பெயராய்ப்
பெண்ணைக் குறித்தது. (11)
நளன், தமயந்திக்கு ஒரு பெண்ணைச்
சிவனோடு ஒப்புரைத்தல்
190. கொய்த குவளை கிழித்துக் குறுநுதல்மேல்
எய்தத் தனிவைத்த ஏந்திழையாள் - வையத்தார்
உண்ணாக் கடுவிடத்தை உண்ட ஒருமூன்று
கண்ணானைப் போன்றனளே காண்.
(இ - ள்.) கொய்த குவளை கிழித்து -
தன்னாற் கொய்யப் பட்ட கருங்குவளை மலர்களைப்
புய்த்தெடுத்து, குறுநுதல்மேல் எய்த தனிவைத்த
ஏந்திழையாள் - தன் சிறிய நெற்றியிடத்துப்
பொருந்தும்படி வைத்த தன்னிகரில்லாத ஒரு
மங்கையானவள், வையத்தார் உண்ணா கடுவிடத்தை -
உலகமாந்தர் எவரும் உட்கொள்ளலாகாத கொடிய
ஆலகால நஞ்சை, உண்ட ஒரு மூன்று கண்ணானை - (மக்களும்
பிறரும் உய்தற்காக உண்டு கருமிடறு பெற்ற) ஒப்பற்ற
முக்கண்களையுடைய சிவபெருமானை, போன்றனளே காண் -
ஒத்திருக்கின்றவளாகிய இவளைப் பார்.
(க - து.) நளன் நீராடும்
பெண்ணொருத்தியைக் காட்டிக் ‘கருநெய்தல்
மலரைப் பறித்தெடுத்துக் கிள்ளித்
ந - 15
|