|
தன் நெற்றியில் வைத்துள்ளவள்,
உலகில் யாரும் உண்ணவொண்ணாத ஆலகாலமுண்ட
சிவபெருமான்போன்று தோன்றுகின்றாள்
இவளைப்பார்,’ என்றான் என்பதாம்.
(வி - ரை.) குறு நுதல் - சிறிய
நெற்றி: பெண்கள் உறுப்பிக்களுள் நெற்றியும்
இடையும் அடியும் சிறுத்திருத்தல், நல்லிலக்கணம்
வாய்ந்த பெண்களுக்காதலின், இவள்
அச்சிறப்புடையாள் என்பதைக் குறிக்கக் ‘குறுநுதல்’
என்றார். அப்பெண் கருங்குவளை மலரைக் கிழித்து
நெற்றியில் ஒட்டவைத்துள்ள காட்சி, அம் மலர்
நீல நிறமாதலானும் கண்களுக்கு அப்பூவினை உவமங்
கூறுதலானும், அது நெற்றிக்கண்போல்
தோன்றுகின்றது. சிவபெருமானுக்கு நெற்றிக்கண்
உள்ளதாகலான், அவன் தோற்றம்போன்று
இருப்பதாகத் தமயந்திக்கு வியப்புடன் நளமன்னன்
கூறினானென்க.
திருப்பாற் கடலில் தோன்றிய ஆலகால
நஞ்சைச் சிவபெருமான் உண்டு யாவரையும் காத்தார்
என்பது புராணங்கள் கூறும் வரலாறு. இதனை
இளங்கோவடிகளார் தாம் ஆக்கியருளிய
சிலப்பதிகாரச் செஞ்சொற் காவிய
வேட்டுவவரியில், காளியை வழிபடும் வேட்டுவர்
வாயிலாக அமைத்து,
1‘விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்’
என்றும்,
பட்டினத்தடிகளார் தாம் யாத்தருளிய
கோயினான்மணி மாலையில்,
2‘......கடல்நஞ்சை உண்டிலை யாகிலன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக
வணங்குவதே’
என்றும், இன்னும் பிற பிற ஆன்றோர்
எல்லாம் எடுத்துரைத்துள்ள நிலையைப் பரந்துபட்ட
தமிழ் நூல்களில் காண்க.
இக்கருத்துக்களை உட்கொண்டே இவரும்
‘வையத்தார் உண்ணா.........கண்ணானை’ என,
அமைத்துக் கூறினாரென்க.
ஏந்திழையாள்: குறிப்பு வினையாலணையும்
பெயர். உண்ணா: ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம். கடுவிடம்: இருபெயரொட்டுப்
பண்புத்தொகை; அல்லது உருபும் பயனும் உடன்
1. சிலப், 12 : 2. கோயில் நான்மணிமாலை
: 34.
|