|
(க - து.) தமயந்தியும் நளனும்
குளங்கள் ஆறுகள் முதலியவற்றிலெல்லாம்
நீர்விளையாட்டுச் செய்து, இறைவனை நினைந்த
மனத்தினராய்க் கங்கையாற்றில் படிந்து மூழ்கி
அன்புமாறாமல் அங்குள்ள ஓர் பொழிலில்
தங்கினார்கள் என்பதாம்.
(வி - ரை.) காவி - கருங்குவளைமலர்:
முதலாகு பெயராக அதன் மலரைக் குறித்தது.
பொருதல்-மாறுபடல் என்றலுமாம். தன்
குளிர்ச்சியாலும் கரியநிறத்தாலும்
கண்டாருயிருண்ணும் தோற்றத்தாலும் கண்கள்
குவளைமலருக்கு மாறுபட்டதென்க. திருவள்ளுவர் தந்த
காதலன் தன் காதலியைக் பாராட்டுங்கால் அவள்
கண்களின் சிறப்பை நோக்கிக் கூறுகின்றவன், ‘கருங்குவளைமலர்கட்குப்
பார்க்குந்தன்மை இல்லாது போயிற்று; அஃதொன்று
மட்டும் இருக்குமேயாயின், என் காதலியின் கண்களை
யொவ்வேமென்று கருதி நாணங்கொண்டு நிலத்தை
நோக்கிக் கவிழ்ந்துகொள்ளும்’ என்று வியந்து
பாராட்டுகின்றான். ஈண்டும் அக்கருத்தை
உட்கொண்டே ‘காவி பொருநெடுங் கண்’ என்றார்.
1‘காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று’
என்பதது. காதலர்க்குக் காவும் யாறும்
சோலைகளும் இன்பம் பயக்கும் தன்மையனவாகலான்,
புதுமணம் புணர்ந்த காதலன் காதலிகளாகிய நளனும்
தமயந்தியும், அவைகளுட் படிந்தாடினாரென்று
கூறினார். ஆடி : இறந்தகால வினையெச்சம்.
உறைந்தார் : இறந்தகால வினையாலணையும் பெயர்.
உறைந்தார் என்பதற்கு ஏற்ற தன்மையாகப் பொழில்
வருவித்துரைக்கப்பட்டது, பின் சோலையைக்
குறித்துவருதலான். (19)
நளன், தமயந்திக்குச் சோலையைக்
காட்டல்
198. நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும் - இறைவளைக்கைச்
சிற்றிடையாய் பேரல்குல் தேமோழியாய் மென்முறுவல்
பொற்றொடியாய் மற்றிப் பொழில்.
(இ - ள்.) இறைவளைக்கை சிறுஇடையாய்
- சிறந்த வளையலணிந்த கைகளையும் சிறிய இடையையும்
உடையாளே! பேர்
1. திருக்குறள் : 1114.
|