|
மேல் ‘இறைவளைக்கை’ என்றதால்,
பின், தொடி என்ற சொல்லுக்குத் தோள்வளையென்று
பொருள் கூறப்பட்டது. மற்று: அசைச் சொல். (20)
நளனைத் தமயந்தி வினவுதல்
199. கன்னியர்தம் வேட்கையே போலும் களிமழலை
தன்மணிவாய் உள்ளே தடுமாற - மன்னவனே !
இக்கடிகா நீங்கள் உறையும் இளமரக்கா
ஒக்குமதோ என்றாள் உயிர்த்து.
(இ - ள்.) கன்னியர்தம் வேட்கையே
போலும் - (மணப் பருவம் வாய்ந்த) இளநங்கையர்
உள்ளடக்கிக் கொண்டிருக்கின்ற காதலைப்போல,
தன் மணிவாய் உள்ளே களிமழலை தடுமாற - (தமயந்தி)
தன் அழகிய வாயிடத்திருந்து இளஞ்சொற்கள் நன்கு
வெளிப்படாமல் தோன்றும்படி (மென்குரலில்)
உயிர்த்து - (காதல்மிக்க வருத்தத்தால்) பெருமூச்சு
விட்டுக்கொண்டு, மன்னவனே - அரசே! இக்கடிகா
நீங்கள் உறையும் இளமரக்கா ஒக்குமதோ -
இம்மணமிக்க பூஞ்சோலை நீயும் நின் நண்பர்களும்
இருக்கின்ற இளமரச்சோலையை ஒத்துள்ளதோ,
என்றாள் - என்று நனமன்னனை வினாவினாள்.
(க - து.) நளமன்னன் இவ்வாறு
கூறக்கேட்ட தமயந்தியானவள் காதல் வருத்தத்தால்
சொற்கள் தடுமாற, பெருமூச்சுவிட்டுக்கொண்டு,
‘அரசே ! நீங்கள் இருக்கின்ற இளமரச்சோலையை
இச்சோலை ஒத்துள்ளதோ’ என்று கேட்டாள்
என்பதாம்.
(வி - ரை.) ‘நாங்கள் இருக்கின்ற
மாவிந்த நகரச் சோலை போன்றது இச்சோலை’
யென்று நளமன்னன் கூறக் கேட்டவுடன், தமயந்திக்கு
நளன்பாற்கொண்ட காதலால், வேறு மகளிரும்
இவர்பால் தொடர்புடையார் போலும் என்னும்
கருத்தினால் சினம் பொங்க, அதனால்
பெருமூச்செறிந்து நாக்குழறச் சொற்கள் தடுமாற, ‘இச்
சோலை, ‘நீங்கள் இருக்கின்ற இளமரச் சோலையை
ஒத்ததோ’ என்று வருத்தத்தோடு நளமன்னனை
வினவித் தன் குறிப்புணரக் கூறினாள். இதில், அவள்
சொள்கள் தடுமாறித்தடுமாறி விளக்கமாகச்
சொல்லவொண்ணாதவாறு அவள் வாயிலிருந்து
தோன்றியதால், அச்சொற்கள் வந்த நிலைக்கு,
|