‘கன்னியர்தம் வேட்கையே போலும்......தடுமாற’
என்றார்.
1‘மருங்குல் தோய்ந் தொளிப்பச்
செம்பொன் வனமுலை இறுமாப்பெய்த, கருங்குழற்
கற்றைபானாட் கங்குலை வெளிறு’ செய்யும்
மங்கைப்பருவம் வாய்ந்து, மணமின்றிச் சில்லாண்டு
கழிக்கும் நங்கையர்க்குச் காதல் வேட்கை
கைம்மிகுந்து அக் காதலை வெளிக்குச்
சொல்லவொண்ணாது மனத்தால் நினைந்து நினைந்து
வாடுதலும், அதனால் அவள் வாடுகின்றாள் என்ற
குறிப்புத் தோன்றுதலும் இயல்பு. அதுபோன்றே
தமயந்தியும் தன் கருத்து வெளிப்படையாகத்
தோன்றாமலும் குறிப்பாகத் தோன்றுமாறும்
வினவினாளென இவ்வுவமை வாயிலாகக் குறித்தார்.
களிமழலை - கேட்டார்க்கு இன்பந்தரும்
மென்சொற்கள். மணிவாய் - முத்துக்கள் கோத்தது
போன்றிலகும் பல் வரிசையுடைய வாய். 2‘பாகு பொதி
பவளம் திறந்து நிலாஉதவிய, நாகிள முத்தின் நகை
நலம்” என்றார் பிறரும். உள்ளே தடுமாறுதல் - நன்கு
வெளிப்படாது சொல்லியும் சொல்லாததுமாகப்
பிணங்கிப் பேசுதற்குரிய செயல். நீங்கள் என்பது
முன்னிலைப் பன்மை : அது நளனோடுறைகின்ற மகளிரையும்
நளமன்னனையும் சேர்த்துத் தமயந்தி தான் கொண்ட
கருத்தைக் குறித்தது.
3‘யாரினும் காதலம் என்றேனா
ஊடினாள்
யாரினும் யாரினும் என்று’
இத்திருவள்ளுவர் காட்டும்
காதலர்களில், தலைவன் தன் காதலியை நோக்கி ‘நாம்
இருவரும் உலகில் வாழ்கின்ற மற்றைய
காதலர்களினும் மிக்க காதலுடையேம்’ என்று
கூறினானாக, அது கேட்ட காதலி, அதனை மற்ற
மங்கையர்பால் தான் கொண்டிருக்கும் காதலைவிடத்
தன்பால் மிக்க காதலுடையனாக இருப்பதாகக் கருதி,
‘என்னைவிட வேறு யாரிடத்தில் காதல் கொண்டுளை’
என்று கூறிக்கொண்டு சினந்து பிணங்கினாள்.
இதுபோன்றே நளன், ‘நாங்கள் உறைகின்ற சோலையை
இச்சோலை ஒக்கு’மென்று தன்மைப் பன்மையால் தன்
நண்பர்களுடன் இருந்ததைக் குறிப்பிட்டுரைக்க
இங்குத் தமயந்தியும் அவன்றன்
காமக்கிழத்தியருடன் என்று கருதிப் பிணங்கி ‘நீங்கள்
உறையும் இளமரக்கா ஒக்குமதோ’ என்று கூறினாளென்க.
இவள் தன் ஆரா அயரா அன்புப் பெருக்கை
1. திருவிளையாடல் : 2. சிலப், 8 : 80 - 1.
3. திருக்குறள் : 1314.
|