பக்கம் எண் :

மூலமும் உரையும்239

யென்றதும் அது. கழல் : வீரத்துக்கும் வெற்றிக்கும் அடையாளமாக வீரர்கள் காலிலணியும் பொற்றண்டை. இதனை,

1‘சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து’

எனத் திருவள்ளுவரும்,

2‘சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்து’

என இளங்கோவடிகளும் அருள்வது காண்க.

கழலணியும் மன்னர்களையும் புறமுதுகிட்டோடித் தோற்கச் செய்யும் பெருமையுடையானென வீமனைக் குறித்தார்; அவ்வீரப்பண்பினால் மகனறிவு தந்தையறிவென்பாரகலான், தன் காதற் கணவன்பால் ஈயும் பறந்திருக்க இடங்கொடாக் கற்புக் குலமணியாகத் தமயந்தி திகழ்பவளென, அப்பண்புநிலை தோன்றக் ‘குடை சிவப்ப நின்றான் கொடி’ என்றார். ‘கொடி’ என்பது, தான் பற்றிய பொருளை விடாதுபற்றிப் பிணைந்து தழுவி நிற்றலையுடையது. அதுபோன்று இக் கற்பின் கொழுந்தாகிய தமயந்தியும் தன் காதலனைப் பிரியாது அவன் செல்சார் பெல்லாம் தான் செல்லும் பண்பு பெற்றுள்ள காதல் நெஞ்சுடையளாக இருக்கின்றாள் என்பது தோன்றவே, இச் சொல்லால் அமைத்துரைத்தாரென்க. (22)

தமயந்திக்கு ஊடலால் முகம் முதலிய உறுப்புக்கள் மாறுபடல்

201. தங்கள் புலவி தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில் - அங்கண்
வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவம் என்னும்
கொடியாடக் கண்டானோர் கூத்து.

(இ - ள்.) தங்கள் புலவி தலையில் - (பின்வரும்) நளன் தமயந்தி இருவர்க்கும் நிகழ்ந்த பிணக்கில், தனித்து இருந்த - (நளனைவிட்டு விலகித்) தனியாகப் பக்கலில் இருந்த, மங்கைவதன மணி அரங்கில் - தமயந்தியுடைய முகங்களென்னும் அழகிய நடனசாலையில், அம் கண் வடிவாள் மேல் - அழகிய கண்கள் என்னும் கூர்மை பொருந்திய வாளின்மீது, வார்புருவம் என்னும் கொடி - நீண்ட புருவமென்னும் நடனப் பெண்கள், கால்வளைத்து - (தன் நுனியாகிய) கால்களைச் சுழற்றி, ஓர்

1. திருக்குறள் : 777. 2. சிலப், 20 : 60.