பக்கம் எண் :

240நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

கூத்து ஆட கண்டான் - சிறந்த நடனமாடுவதை நளவேந்தன் பார்த்தான்.

(க - து.) புலவியாக இருந்தபோது தனக்கெதிரில் பக்கத்தில் விலகியிருந்த தமயந்தியின் முகமாகிய நடன சாலையில், புருவமாகிய நடனப்பெண்கள், கண்களென்னும் வாள்மீது தன் நுனியாகிய கால்களை வளைத்துக் கூத்தாடுவதை நளன் பார்த்தான் என்பதாம்.

(வி - ரை.) தங்கள் என்றது, நளன் தமயந்தி இருவரையும்; புலவி - சிறிதுநேரம் தோன்றும் வெறுப்பு : இது காதலர்களுக்குள் நிகழ்வது. நளனுக்கும் தமயந்திக்கும் பிணக்கு நிகழ்ந்த போது, தமயந்தியின் முகம் தன் இயற்கைமாறிச் சினத்தால் வேறுபட்டது, அதனை நடனசாலையாகவும், தமயந்தி தன் கண்களால் நளனைப் பார்ப்பதும் பின் தலைகுனிந்திருத்தலும் பின் ஏறெடுத்துப் பார்த்தலுமாக இருந்தாள்; அக்காட்சித் தன்மையுடைய கண்களைக் கூரிய வாளாகவும், கண்கள் பார்க்குங்கால் கண் புருவம் மேலேறுவதும் இறங்குவதுமாக இருப்பதை, நடன மங்கையராகவும், அதன் நுனிப்பகுதியை அவர்தம் காலாகவும், உருவகஞ்செய்து அந்நடனப் பெண்கள் நடனமாடுவதாகக் குறித்து, அதைப் பார்த்த நளனை அந்நடங்கண்டு களிப்போனாகச் சித்திரித்தார். இப்பிணக்கை ஓர் நாடக அரங்காக்கிக் கற்பார்க்கு இன்பூட்டும் புகழேந்தியார் கல்வித்திறம் போற்றும் தன்மையது. தமயந்தி சினந்தபோது முகம் வேறுபட்டது ; கண்கள் நளனைப் பார்த்தலும் சிமிழ்த்தலுமாக இருந்தன ; புருவங்கள் ஏறலும் இறங்கலுமாக இருந்தனவென்று இதன் கருத்தாகக் கொள்க. கட்பார்வையின் கொடுமை தோன்ற ‘வடிவாள்’ என்றார். கழைக்கூத்தாடும் மகளிர் கால்வளைத்துக் கூரிய வாளின்மேல் நின்றாடுவராகலான், அதனைப் பன்முறை கண்டு களித்த ஆசிரியர், தமயந்தியின் முகத்திடத்தேயே அக்கழைக் கூத்து நிகழ்ச்சியைக் காட்டினார். (23)

நளமன்னன், தமயந்தியின் ஊடல்தணிய அவள் தாளில்
விழுந்து வணங்கல்

202. சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடியைத்
தொல்லை மணிமுடிமேல் சூட்டினான் - வல்லை
முழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த
செழுநீலம் மாறாச் சிவப்பு.