|
(இ - ள்.) சில் அரி கிண்கிணி -
(தமயந்தியுடைய) சில்வகைப் பரற்கற்கள் கொண்டு
ஒலிக்கின்ற சதங்கைகளையணிந்த, மென்
தெய்வமலர்ச் சீறடியை - மென்மையான பெருமை
பொருந்திய செந்தாமரை மலர்போன்ற சிறிய
காலடிகளை, தொல்லை மணிமுடிமேல் - ஒளிமிக்க
மணிகள் பதித்த தன் முடியின்மீது, சூட்டினான் -
(அவள் பிணக்கம்தீர) அணிந்தான், முழு நீலக்
கோதை-காம்பொடிக்காது கட்டிய நீலமலர்க்
கண்ணியை அணிந்த கூந்தலாளாகிய தமயந்தியினுடைய,
முகத்தே செழு நீலம் - முகத்தின்கண்
பூத்திருக்கின்ற செழுமைமிக்க நீலமலர் போன்ற
கண்கள், வல்லை சிவப்பு மாறா மலர்ந்த - விரைந்து
(சினத்தால் தோன்றிய) செந்நிறம் நீங்கித்
திகழ்ந்து நின்றன.
(க - து.) இவ்வாறு தமயந்தி ஊடலால்
சினந்திருந்த போது, நளமன்னன் அவள் காலடிகளில்
விழுந்து வணங்கினான் ; உடனே அவள் சினந்தணிந்து
கண்கள் சிவப்பு மாறி நின்றாள் என்பதாம்.
(வி - ரை.) தமயந்தி பிணக்கத்தால்
சினந்தது கண்ட நளன், அவள் ஊடல் தணித்தற்
பொருட்டாக அவள் காலடிகளில் வீழ்ந்து வணங்கினன்
; அதைக்கண்ட தமயந்தி சினம் மாறி அகம்மிக
மகிழ்ந்தாள் ; அவள் மகிழ்ச்சிக்கு
அறிகுறியாகக் கோபத்தால் செந்நிறங்கொண்ட
கண்கள், பண்டேபோல் இயற்கைநிறங்கொண்டன.
இதனை ஆசிரியர், தமயந்தியின், ‘மலர்ச்
சீறடியைத் தொல்லைமணி முடிமேற் சூட்டினான்’ என்று
இலக்கணை வாய்பாட்டாற் கூறினார். தெய்வமலர் -
செந்தாமரை மலர். அதனை மற்றெல்லாவகை
மலர்களினும் உயர்ந்ததாகக்
கொண்டாடப்பெறுதலால், ‘தெய்வம்’ என்று
அடைகொடுத்தார். தெய்வமென்ற சொற்குப்
பெருமையென்று பொருளுரைத்தது, அதனை எல்லோரும்
மேன்மையாகக் கொள்ளுதல் கருதி. இதனைத் ‘1தெய்வத்
தாமரைப் போதுறை செல்வியும்’ என்று, இவ்வாறே ‘தெய்வத்தாமரை’
எனப் பிறரும் கூறுவது காண்க. சீறு + அடி = சிறுஅடி = சிற்றடி: முதனீண்டு வந்தது.
தொல்லை - பழமை யென்னும் பொருளது. ஆயினும்
மணிகட்குப் பழமை, நன்கு முதிர்ந்து அம்முதிர்வால்
அதன் ஒளி மிகுதியாதல். ஆதலால், அதற்கு ஒளிமிக்க
எனப் பொருளுரைத்தாம். சூட்டுதல் : தன்
மணிமுடியணிந்த தலைமீது அவள் அடிகள் படும்படி
வணங்குதல்.
ஊடற்காலத்து இல்லக்கிழத்தி
உயர்வுகொள்ளலும், இல்லக்கிழவன் பணிவுறலும்
இயல்பாக நிகழும் இயற்கை நிகழ்ச்சி
1. நைடதம், அன்னத்தைத்தூது : 45.
ந. - 16
|