பக்கம் எண் :

242நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

1மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்
நினையுங் காலைப் புலவியுள் உரிய’

என்பது தொல்காப்பிய விதி.

கற்பனைக் களஞ்சியமாகிய துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகளார், தாம் ஆக்கியருளிய பிரபுலிங்க லீலை யென்னும் சமயக் கற்பனைக் காப்பியத்தில், இறைவணக்கங் கூறுகின்றார். அவற்றுள் உமையம்மையார்க்கும் வணக்கங் கூறுகின்றார். அதில் இந் நிகழ்ச்சியைக் - காதலன் காதலிகளுக்குள் நிகழும் இப்பிணக்கை - அம்மையப்பருக்குள் நிகழ்ந்ததாகக் குறிக்கின்றார் அது : ‘அம்மைக்கும் இறைவனுக்கும் பிணக்கு நிகழ்ந்தது. அப்பிணக்கைத் தீர்க்கும் பொருட்டு ஆண்டவன் அம்மையின் அடிகளில் தன் சடைமுடி தாழ வணங்குகின்றான். அதுகாலை, அவன் முடியிலுள்ள கங்கையும் மதியும் பாம்பும் பிறவும் பணிவுறுகின்றன. அப்போது அம்மை, உலகை ஆக்கலும் காக்கலும் போக்கலும் வல்லமுழுமுதல் இறைவனே நம் காலடிகளில் வணங்குகின்றானே என்று, அவள் ஊடல் நீங்கினாளில்லை; தன் நெற்றிப்பகையாகிய பிறை, அல்குற்பகையாகிய பாம்பு இவைகளும் பணிகின்றன ; பகைவர் பணியின் எவரும் மகிழ்வதியற்கை; சினம் மாறுவதும் இயற்கை ; அதற்கும் ஊடல் தணியவில்லை. பின் எதற்கு அவள் சினந்தணிந்த தெனின்? தன்னோடு பங்காளியாக சக்களத்தியாக - தான் பக்கத்தில் சரிநிகர் சமானமாக இருப்பத் தன்னினும் விஞ்சி அவன் தலையில் வீற்றிருக்கின்றாளே கங்கை ; அவள்கூடப் பணிகின்றாளே என்று, சினந்தணிந்து தன் ஊடல் நீங்கினாள் ; அத்தகையாளின் திருவடிகளை வணங்குவாம்’ என்று சுவைபட அம்மை வணக்கங் கூறுகின்றார். அத்தன்மை போன்று மன்னர் மன்னனாகிய நளன், வேற்றுநாட்டு வேந்தரெல்லாம் திருமுடிபட வணங்குகின்ற செம்மைத்தாளினான், தன் அடிகளில் வணங்கினானே என்று கருதித் தன் பிணக்கு நீங்கினாள் என்பாராய்த், ‘தொல்லை மணிமுடிமேல் சூட்டினான்......செழுநீலம் மாறாச் சிவப்பு’ என்றார். சிவப்பிரகாசர் தந்த அப்பாடலையும் ஈண்டுக் காட்டுவாம் :

2‘ஆதி பகவன்றன் தூடல் தணிப்பான்

பணிய அவ்விறைவன்

பாதம் இறைஞ்சும் அதற்கும் நெற்றிப்

பகையும் அல்குற் பகையுமாம்

1. தொல், பொருளியல் : 33. 2. பிரபுலிங்க லீலை : 2.