பக்கம் எண் :

248நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதம்என் றிசையால்திசை போய துண்டே’

என்றார். இந்நிடத நாட்டில் மாமரம் தழைத்துச் செழித்து வளர்ந்திருக்கின்றன ; அதன்கீழ் வாழைமரங்கள் விரிந்த இலைகளைப் பரப்பிக்கொண்டு கன்றுகளுடன் இருக்கின்றன; மாம்பழம் மிகக் கனிந்து அக்கனிச் சாற்றைச் சொட்டுச் சொட்டாக வடிக்கின்றன; அது வடிந்து வாழைக்கன்றின் குருத்துக்களில் நிறைந்துவிடுகின்றன; சோலைக்குச் சென்ற மயிலன மங்கையர், அது நிறையத் தேன் இருப்பதால், ‘தேன்நிறைந்த புட்டில் தானோ?’ என ஐயங்கொண்டு நோக்குகின்றனர்; பெண்கள் ஐயங்கொள்ளுமாறு அவ்வளவு வளமுள்ள சோலையெனச் சோலையின் ஏற்றங் கூறினார்.

சுருள் - சுருண்டிருப்பதால் இங்கே இளங்குருத்தை உணர்த்திற்று. குப்பி - புட்டில்; இக்காலத்துப் ‘புட்டி’ எனவும், ‘பாட்டல்’ எனவும் வழங்குவர். திருமுருகாற்றுப் படையில் நக்கீரனாரும் 1‘அம் பொதிப்புட்டில்’ என்றதூஉம் காண்க. புட்டில், தக்கோலம் என்னும் முதலின் காய் என்றும், அது, புட்டில் போறலிற் புட்டில் என்றும், நச்சினார்க்கினியர் உரை வகுத்ததும் கொண்டு தெளிக. வை - கூர்மை. வேற்படைக்குச் சிறப்பு. அதனை யேந்திய படையையுடைய நளமன்னனுக்குச் சிறப்புக் கூறியவாறாம். (27)

நளன், தமயந்திக்குத் ‘தன் மாவிந்தமாநகர் இதுதான்’
என்று காட்டல்

206. வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்
தான் தோன்றும் மற்றித் தடம்பதிதான் - வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே எங்கள் நகர்.

(இ - ள்.) வான் தோன்றி - சிறந்த செங்காந்தட் செடிகள், வில் விளக்கே பூக்கும் - ஒளி பொருந்திய விளக்குப்போல் மலர்கள் தருகின்ற, விதர்ப்பநாடு ஆள் உடையான் - (வளம் பொருந்திய) விதர்ப்ப நாட்டினை ஆள்கின்ற உரிமைபெற்ற வீமமன்னனின், நல் விளக்கே - நல்ல விளக்கென்னும்படி விளங்குகின்றவளே ! வான்தோய நீண்டு உயர்ந்த - வானத்தைத் தொடுமளவுக்கு நீட்சியாகி உயர்ந்திருக்கின்ற, மாடக் கொடி நுடங்க - மாளிகை

1. திருமுருகு : 191.