(இ - ள்.) கோடுவன - கோணியிருப்பன,
வெம்சிலையே (அந்நகரில் எவரும் இல்லையாகையால்)
கொலைத்தொழிலுடைய விற்களே, சோருவன -
தளர்ந்திருப்பன, மென்குழலே - (அந்நகரில் வேறு
எவரும் இல்லையாகலான்) மெல்லிய (பெண்களின்)
கூந்தலே, வாய்விட்டு அரற்றுவன - வாய்திறந்து
கதறுவன, அம் சிலம்பே - (அந்நகரில் வேறு
எவருமில்லையாகலான் பெண்களின் காலிலணிந்துள்ள)
அழகிய தண்டைகளே, கலங்குவன - கலக்கமடைவன, கஞ்சம்
- (அந்நகரில் வேறு எவருமில்லையாகலான்) தண்ணீரே,
மெய்நெறியை விட்டு விலங்குவன - உண்மை
வழியைவிட்டு விலகிப்போவன, காரிகையார் கண்ணே -
(அந்நகரில் வேறு எவருமில்லையாகலான்) பெண்களின்
கண்களேயாகும்.
(க - து.) அந்நகரில்
குற்றமுள்ளோரும் தளர்வோரும் புலம்புவோரும்
கலங்குவோரும் நல்ல நெறியைவிட்டு விலகி
நடப்போரும் ஒருவருமிலர் என்பதாம்.
(வி - ரை.) வெம்சிலை - கொடியவில்;
கோடுதல் - வளைதல். அந்நாட்டில்
ஒருதலைச்சார்பாய் நடுவின்றி நன்பொருள்
அவாக்கொள்வாரில்லை என்றவாறாம்.
சோர்தல்-தளர்ச்சியுறல்: தன்னிலை குலைதல்
உள்ளார் யாருமேயில்லை எனக் குறித்தவாறாம்.
எனவே மாவிந்தநகரில் குறையில்லாதவரே உள்ளனர்
என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.
கம்பர் தாம் ஆக்கியருளிய இராமாயணப்
பெருங்காப்பியத்தில் அயோத்திநகரைக்
குறிக்கும்போது,
1‘எல்லாரும் எல்லாச் செல்வமும்
எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை’
என்றார். அக்கருத்தைத் தழுவியே
இவரும் இவ்வாறு கூறினாரென்க. (15)
அந்நகர் மக்களுள் கல்லாரும்
இல்லாரும் இன்றெனர்
23. தெரிவனநூல் என்றும் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே -
ஒருபொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்தெவரும்
கல்லா தனவும் கரவு.
1. கம்பராமா, நகர : 74.
|