பக்கம் எண் :

மூலமும் உரையும்253

நாட்டை ஆள்கின்றான் ; குடிகட்கு நலஞ்செய்கின்றான் ; ஒழுக்க முறை வழுவாது ஒழுகுகின்றான் ; எனவே அவன், என்றாவது தவறான வழியில் நடக்கின்றானா? என்று காலம் நோக்கி நோக்கிப் பன்னிரண்டாண்டுக் காலம்வரை பார்த்திருந்தான். குற்றங் காண்பதற்கில்லை. இதனை ஆசிரியர் ‘ஆண்டிரண்டர் றெல்லை.......காண்கிலான்’ என்றார்.

செம் நெறி - நேர்மையான வழி : கோல்முறை கோடாச் சிறப்பு. செங்கோல் : செவ்விய கோல்போறலின் செங்கோலாட்சிக் காயிற்று. இஃது உவம வாகுபெயர். நிலவேந்தன்-பாருக்கெல்லாம் அரசனென்றலுமாம். (31)

கலிமகன், நளமன்னனைச் சேர்தல்

210. சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு
புந்தி மகிழப் புகுந்துகலி - சிந்தையெலாம்
தன்வயமே ஆக்கித் தமைய னுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து.

(இ - ள்.) சந்திசெய தாள்விளக்க - (நளன் ஒருநாள்) கடவுள் வழிபாடு செய்தற்குத் தன் கால்களை நீராற் கழுவ, தாளில் மறு தான் கண்டு - கால்களில் நீர் நன்கு படியாது சிறு அளவு நனையாமல் அழுக்கிருப்பதைக் கலியானவன் அறிந்து, புந்தி மகிழ புகுந்து - தன் மனம் மகிழ நளன்பால் சார்ந்து, சிந்தை எலாம் தன்வயமே ஆக்கி - நளனுடைய எண்ணங்களை யெல்லாம் தனக்குரிமையாம்படி செய்து, பொன் அசல மார்பன் புகைந்து - இமயமலையையொத்த மார்பையுடைய நளமன்னனைச் சினந்து (பகைத்து), தமையனுடன் இருந்தான் - (நளனுக்கு) அண்ணன் முறைகொண்டுள்ளவனாகிய புட்கரனுடன் அவனுக்கு உதவியாக இருந்தான்.

(க - து,) நளமன்னன், கடவுள் வழிபாடு செய்தற்காக ஒருநாள் தன் கால்களைக் கழுவுகையில் நீர் படாதிருக்கும் மறுவைக்கண்டு கலி மகிழந்து, உடனே அவன்பாற் புகுந்து அவன் எண்ணமெல்லாம் தன் எண்ணமாக்கிப் புட்கரனுடன் சார்ந்திருந்தான் என்பதாம்.

(வி - ரை.) சந்தி - சந்தியாவந்தனம் என்னும் வடசொல்லின் கடைக்குறைபெற்ற சொல். அது கடவுளைத் தொழுதல் என்னும் பொருளது. சந்தியாவது பகலும் இரவும் ஒன்று கலந்த