பக்கம் எண் :

256நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

(இ - ள்.) புலைநரகுக்கு ஏதுவாய் நின்றான் - இழிவான நரகமடைதற்குக் காரணமாக இருந்தவனான கலியானவன், மன்னவனே - ஏ புட்கரவேந்தே ! நல்நெறி இல் சூதால் - நல்ல வழியில்லாத சூதாட்டத்தினால், நளனை களவு இயற்றி - நள மன்னனை வஞ்சித்து, தன் அரசு வாங்கி தருகின்றேன் - அவனுக்குரிமையான அரசாட்சியை உனக்கே பறித்துக் கொடுப்பேன், என்னுடனே போதுவாய் என்றான் எடுத்து - என்னோடு வருக வென்று எடுத்துக் கூறினான்.

(க - து.) ‘வஞ்சனைமுறையில் சூதாட்டத்தால் நளனைவென்று உனக்கு அவனுடைய நாடு நகர்களைக் கவர்ந்து தருகின்றேன் ; என்னுடன் வருக’வென்று புட்கரனைக் கலிமகன் அழைத்தான் என்பதாம்.

(வி - ரை.) நல்நெறி இல் - நல்லவழி இல்லாத எனவும், சூதாடற்கு ஏற்ற வழியில் எனவும் கவர்படு பொருள்தர நின்றதறிக. சூது - கவறாடல். ஒன்றெய்தி நூறிழக்கும் தன்மையானும், சூதின் வாய்ப்பட்டோர், சூதாடுதலொன்றிலேயே கருத்தூன்றிப் பிறகடமைகளையெல்லாம் மறந்து கைவிடுவராதலானும் ‘நன்னெறியில் சூது’ என்று அடைகொடுத்துக் கூறினார். தன் அரசு - நளனுக்கே உரிமையான அரசாட்சி. ‘தருவேன்’ என, எதிர்காலத்தே கூறப்பெறுவது, ‘தருகின்றேன்’ என்றது, உறுதியாக வாங்கித் தருவேனென்னும் தெளிவினால் என்க. என்னை?

1‘விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும்
பிறழவும் பெறுஉம்முக் காலமும் ஏற்புழி’

என்றாராகலின், அவ்விதிபற்றி இங்கே எதிர்காலம் நிகழ்காலமாக வந்த காலவழுவமைதி. புலை நரகு - கீழ்மையான நிரயத் துன்பம். தன்வயப்பட்டோர் எத்தகையராயினும் அவரைக் கொடுந்துன்பத்துக் குள்ளாக்கிக் கெடுத்தற்குரிய னாதலான், அவனைப் ‘புலைநரகுக் கேதுவாய் நின்றான்’ என்றார். நளனுக்கு என்று கூறி நளனை யென்பதை உருபுமயக்கமாகக் கொள்வாருமுளர். (34)

கலி சொல்லியபடி புட்கரன் நளனோடு சூதாடப் புறப்படல்

213. புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி இளமேதிக் காற்குழம்பு . பொன்னுரைத்த
கல்ஏய்க்கும் நாடன் கவறாடப் போயினான்
கொல்ஏற்றின் மேலேறிக் கொண்டு.

1. நன்னூல் : 384.