1‘மண்ணவர் வறுமைநோய்க்கு மருந்தன
சடையன் வெண்ணெய்
அண்ணல்தன் சொல்லே யன்ன
படைக்கலம் அருளினானே.’
என்பது அதில் ஒன்றாம்.
தாமரையாள் - திருமகள். 2‘தாளுளாள்
தாமரையி னாள்’ என்பதினும் தாமரையாள்
இப்பொருட்டாதலை அறிக. காமரு - அழகு. காமர் உகரச்
சாரிகை பெற்று வந்தது.
3‘காமரும் மடந்தையர் கடைதொறும்
கடைதொறும்.’
எனக் குமரகுருபரர் திருவாரூர் நான்மணி
மாலையில் அருளியதும் காண்க.
முரணை நகரை மாவிந்த நகருக்கு உவமை
கூறினார். தாம் அறிந்த முரணை நகர் செல்வச்
சிறப்பாலும் கல்விச் சிறப்பாலும் வெற்றி வீரம்
மானம் கொடை முதலியன பல்கி யாவரும் வந்து
தங்குதற்கு ஏற்ற தன்மை நிரம்பியதாக
இருத்தல்போல, இந்நகரும் இருக்கின்றதென்று
விளக்குவாராய் ‘முரணை நகர்தான் என்று
சாற்றலாம்’ என்றார். இவ்வாறே கம்பரும் இராமன்
கோசல நாட்டைவிட்டு முடிதுறந்து கானேகும்போது
அந்நாடு எத்தகைத்து என்று கூறுங்கால்,
4‘காவிரி நாடன்ன கழனிநாடு ஒரீஇ’
என்று தாம் வாழ்ந்திருந்த சோழ
நாட்டைக் கோசல நாட்டுக்கு உவமை கூறியது காண்க.
அந்நகரை ஆண்டோன் நளமன்னன் எனல்
25. ஓடாத தானை நளனென் றுளனொருவன்
பீடாரும் செல்வப் பெடைவண்டோ - டூடா
முருகுடைய மாதர் முலைநனைக்கும் தண்தார்
அருகுடையான் வெண்குடையான் ஆங்கு.
(இ - ள்.) ஆங்கு - (இத்தகைச் சிறப்பு
வாய்ந்த) அந்நகரில், பீடுஆரும் செல்வ பெடை
வண்டோடு ஊடா - பெருமை பொருந்திய காதல் மிக்க
பெண் வண்டு, ஆண் வண்டோடு பிணக்க முற்றதினால்,
முருகு உடைய - (மலரிலிருந்த) தேன் உடைபட்டு வழிந்
1. கம்ப ராமா, பால. வேள்வி : 1. 2.
திருக்குறள் : 617.
3. திருவாரூர் நான் : 25. 4. கம்ப ராமா,
குகப்: 1.
|