பக்கம் எண் :

மூலமும் உரையும்29

தோட, அருகு மாதர் முலை நனைக்கும் தண்தார் உடையான் - பக்கத்திலுள்ள பெண்களின் மார்பிடமெல்லாம் நனைக்கின்ற குளிர்ச்சி மிக்க மாலையை மார்பில் உடையவனும், வெண்குடையான் - வெண் கொற்றக் குடையையுடையவனும் ஆகிய, ஓடாத தானை நளன் என்று ஒருவன் உளன் - (பகைவர் படைக்கு அஞ்சிப் புறமுதுகிட்டு) ஓடாத, சேனைகளையுடைய நளனென்று சிறப்பித்துக் கூறப்படுகின்ற அரசன் ஒருவன் இருந்தான்.

(க - து.) அந்நகரில் படைவலிமை மிக்க நளன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான் என்பதாம்.

(வி - ரை.) ‘பீடாரும் செல்வம்’ என்றது, உண்மைக் காதலை. உயர்ந்த பொருள்களைச் ‘செல்வம்’ என்று பாராட்டுவது நம் தமிழ்ச் சான்றோர் மரபு. வள்ளுவர்,

1‘அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்’

என்றும்,

2‘கேடில்விழுச் செல்வம் கல்வி’

என்றும்,

3‘செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்’

என்றும்,

4‘பொருளென்னும் செல்வச் செவிலி’

என்றும், அருள், கல்வி, கேள்வி, பொருள் முதலியவற்றையெல்லாம் செல்வம் என்றார். அவர்தம் வழிவந்தவரான இவர், காதலைச் ‘செல்வம்’ என்றார். இச் செல்வம் உலகியலை ஒழுங்குற நடத்திச் செல்லும் சிறப்புடையது ; ஆண் பெண் இரு பாலாரின் உள்ளத்தை ஒருமைப் படுத்தி உயர்வுதரும் பண்புடையது. இத்தகைக் காதலை உயர்த்துவது, நிலைத்திருக்கச் செய்வது ஊடல் ; ஊடல் இன்றேல் காதல், கனியும் கருக்காயும்போல் செல்வி கெடுதலால் அதனை உயர்த்துப் பேசப்பெறும். பெடை - பெண் வண்டு; - ஆண் வண்டு. (18)

நளன், அறநெறியோடு அரசுபுரிந்தான் எனல்

24. சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடல் பருந்தும்
ஒருகூட்டில் வாழ உலகு.

1, 2, 3, 4. திருக்: 241, 400, 411, 757.