பக்கம் எண் :

மூலமும் உரையும்33

கேற்ற தன்மையில் உணர்ச்சியை ஊட்டுவான் என்பதைக் கொண்டு ‘மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம் தென்றல் மதுநீர் தெளித்துவர’ என்றார். மதவேடன் மன்மதனாகிய வேடன் என்றலுமாம். வில்லெடுப்போன் வேடன் ஆதலால். தளவு - முல்லைச்செடி. அது காட்டில் வளர்வது ; தினை - தினையென்னும் ஒருவகைப் புல். மக்கட்கும் மற்ற உயிர் வகைகட்கும் உணவாகக் கொள்ளப்படுவது. அது, மலைச்சாரலில் உண்டாவது. முல்லைக்கொடி அதன்மேற் படர்வதென்பது, முல்லைநிலக் கருப்பொருள் குறிஞ்சிநிலக் கருப்பொருளோடு கலப்பதால் ஒன்றாகச் சேருவதாயிற்று. இதனை ஆன்றோர் திணைமயக்கம் என்பர். இதனைத் திருவிளையாடற் புராண ஆசிரியரும் தாம் ஆக்கிய திருவிளையாடற்புராண நாட்டுப்படலத்தில் ஒரு நிலப்பொருள் மற்றொரு நிலத்தில் வந்து ஒன்றாகக் கலப்பதை மிக அழகுற அமைத்துள்ளார். அதில் ஒன்று!

1‘ஆறு சூழ்கழிப் புலால்பொறா தசைந்துகூன் கைதை
சோறு கால்வன ஆம்பல்வாய் திறப்பன துணிந்து
கூறு வார்எனக் குவளைகண் காட்டிடக் கூடித்
தூறு வார்எனச் சிரித்தலர் தூற்றுவ முல்லை.

இதில், நெய்தல் மருதம் குறிஞ்சி முல்லை என்னும் நானிலங்களின் கருப்பொருள்கள் கலந்திருத்தலை அறிக. விரிப்பின் பெருகுமாதலால் விடுத்தாம். எதிர்வருதல் - நளமன்னனுக்கு முன்பு தென்றல் தேன்துளிகளைத் தூற்றிப் போதல். (21)

நளன் பூங்காவை அடைந்தான் எனல்

29. தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரிப் புனல்நனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்
புக்கிருந்தால் அன்ன பொழில். [கிப்

(இ - ள்.) தூங்கு இருள் வெய்யோற்கு ஒதுங்கி - மிக்க இருளானது சூரியன் ஒளிக்கதிர்களின் முன் விலகி, புக்கு இருந்தால் அன்ன - ஒளித்துக்கொண்டிருந்தாற் போன்ற, கார் வண்டு தொக்கு இருந்து ஆலித்து உழலும் பொழில் - கருநிற வண்டுகள் ஒன்றுகூடிக் களித்துச் சுற்றித்திரிகின்ற சோலையை, தேரின் துகளை திருந்து இழையார் பூ குழலின் - தன்னுடைய தேர் உருளைகளிற் படிந்த புழுதிமண்களைத் திருத்தமான அணிகள்

1. திருவிளை, நாட்டுப் :
ந. - 3