அணிந்த மகளிரின் பூச்சூடிய
கூந்தலினின்று ஒழுகி வழிகின்ற, வேரி புனல் நனைப்ப
அடைந்தான் - பூந்தேனென்னும் நீர் நினைத்துக்
கரைக்கும்படி (நளன்) போய்ச் சேர்ந்தான்.
(க - து.) பெண்கள் கூந்தலில் முடித்த
பூந்தேன் தன் தேர்க்காலின் புழுதிகளைக் கரைக்க
நளமன்னன் சென்று பூங்காவை அடைந்தான்.
(வி - ரை.) தேரின் துகள் -
தேரிடத்துள்ள புழுதி. தேர் - ஆகுபெயராய் அதன்
உருளைகளை உணர்த்திற்று. வேரி - தேன். தூங்கு இருள் -
விலகாத இருளென்று கூறலுமாம். சோலை மரங்களின்
நெருக்கத்தினால் வெளிச்சமின்றி இருட்டி
இருப்பதானது அங்கே, ஞாயிற்று ஒளிக்கதிர்கள்
தம்மை வெருட்டும் என்னும் அச்சத்தால் தனியிடம்
பார்த்து, அக் கதிர்கள் நுழையாத இடத்தில் இருள்
ஒளிந்துகொண்டிருந்தது போன்றிருப்பதாகக்
குறித்தார்.
1‘பரிதியஞ் செல்வன் விரிகதிர்த்
தானைக்கு
இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்’
என்றும்,
2‘வெயினுழைபு அறியாக் குயினுழை
பொதும்பர்’
என்றும் கூறினார், மணிமேகலை
ஆசிரியரும். (22)
நளன்முன் அன்னம் வெளிப்பட்டதெனல்
30. நீள்நிறத்தால் சோலை நிறம்பெயர
நீடியதன்
தாள்நிறத்தால் பொய்கைத்
தலம்சிவப்ப - மாண்நிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு.
(இ - ள்.) ஆங்கு - அச்
சோலையிடத்தே, மாண்நிறத்தான் முன் - மிக்க
அழகுபடைத்த நளன் முன்பாக, அப்பு உள்தோன்றும் -
நீரில் முளைத்தெழுகின்ற, முளரி தலைவைகும் -
தாமரைமலரில் தங்கி வாழ்கின்ற, அன்னப்புள் -
அன்னப் பறவை ஒன்று, (தன்) நீள் நிறத்தால் சோலை
நிறம் பெயர - தன் உடலின் வெண்ணிறத்தினால்
சோலையின் நிறம் வெண்ணிறங் காட்டவும், தன்
நீடிய தாள் நிறத்தால் பொய்கை தலம் சிவப்ப -
1, 2. மணிமேகலை. 4: 1-2; 5.
|