பக்கம் எண் :

38நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

(வி - ரை.) திருமுன்னர் என்பது அரசன் செல்வச்சிறப்பாலும், வெற்றிமேம்பாட்டினாலும் கொடை அளி செங்கோல் குடிஓம்பல் முதலிய அறநெறி முறையிற் சிறந்திருத்தாலும் அவன் முன்னிலையைச் சிறப்பத்துக் கூறியவாறாம். திரு என்னும் சொற்குத் திருச்சிற்றம்பலக் கோவையாருக்கு உரைகண்ட பேராசிரியர், 1‘கண்டோரால் விரும்பப்படும் தன்மை நோக்கம்’ என்று கூறியதும் காண்க.

மலங்குதல்-வருந்துதல். கலங்குதல்-மனவுணர்வு குறைதல். மன்னவன் வேட்டமாடுதலானும் போர் முதலியனபுரிந்து வீரத்திற் சிறந்திருத்தலானும், மறங்கடிந்து அறத்தைப் பாதுகாக்கக் கொலையிற் கொடியாரை ஒறுத்தலானும் தன்னை என் செய்வானோ என்று அன்னம் எண்ணி வருந்தியதாதலான் ‘மன்னவனைக்கண்டு கலங்கிற்று’ என்றார். மலங்கிற்று: என்பதை முற்றெச்சமாகக்கொண்டு பொருள் கூறப்பெற்றது; வினை முற்றாகக் கொள்ளினுமாம். (24)

நளன் அன்னத்தை அஞ்சாதே என்று கூறல்

34. அஞ்சல் மடஅனமே உன்றன் அணிநடையும்
வஞ்சி அனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகாண் என்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்.

(இ - ள்.) களி வண்டு மாண பிடித்த தார்மன் - தேனுண்டு களிகொள்ளும் வண்டினங்கள் மிகுதியாக மொய்த்துள்ள மலர்மாலை யணிந்த நளமன்னன், மட அ(ன்)னமே -, அஞ்சல் - அஞ்சாதே, உன் தன் அணிநடையும்-உனது அழகிய நடையும், வஞ்சி அனையார் மணி நடையும் - வஞ்சிக்கொடி போன்ற மங்கையரின் சிறந்த நடையும், விஞ்சியது காண பிடித்தது காண் என்றான்-(இவைகளுள்) எந்நடை சிறந்தது என்று கண்டு தெளியும் பொருட்டே உன்னைப் பிடித்துக்கொண்டு வந்ததன்றி வேற்றிலை நீ தெரிந்துகொள் என்றுரைத்தான்.

(க - து.) நளமன்னன், ‘அன்னமே ! நீ அஞ்சாதே உன்னைப்பிடித்தது, உன்நடை சிறந்ததா ? மங்கையர் நடை சிறந்ததா ? என்று அறிவதற்கு காண்பாயாக’ என்றான்.

1. திருக்கோவையார், 1. பாட்டு உரை.