பக்கம் எண் :

மூலமும் உரையும்399

மன்னன், சூதால் நாடு நகர் யாவுந்தோற்று, இத்தகைய கீழ் நிலைக்கு உள்ளாக்கினான் எனக் குறைகூறாது, தன் தீவினையே இதற்குக் காரணம், தீயூழால் நல்லன தீயனவாகவும், தீயன நல்லனவாகவும் மாறுகின்றன. அதனால் விளைந்ததே இத்துன்பம் எனக் கருதினவளாய் ‘எனது வினைவலிகாண்’ என்றாள். மெலிதல் - உடல்நிலை தளர்வுகொள்ளல். என்றாள் : முற்றெச்சம்.

சேதியரசி, தமயந்தியை வினாவுதல்

319. அந்தா மரையி லவளேயென் றையுற்றுச்
சிந்தா குலமெனக்குத் தீராதால் - பைந்தொடியே
உள்ளவா றெல்லாம் உரையென்றாள் ஒண்மலரின்
கள்ளவார் கூந்தலாள் கண்டு.

(இ - ள்.) ஒள் மலரின் கள்ளவார் கூந்தலாள் கண்டு - அழகொளி மிக்க மலர்த்தேன் ஒழுகுகின்ற நீண்ட கூந்தலையுடைய சேதியரசி தமயந்தியைப் பார்த்து, (அவள் அழகினை வியந்து), அம் தாமரையில் அவளே என்று ஐஉற்று - அழகிய செந்தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற அழகிய திருமகளேயோ என ஐயங்கொண்டு, பைந் தொடியே - பசிய வளையலையணிந்த மங்கையே, சிந்தாகுலம் எனக்கு தீராது (உன் வரலாறெல்லாம் நன்கு உரையாயாயின் உன்பால் நான் கொண்டுள்ள) கடலினும் மிக்க வருத்தம் என்னை விட்டு நீங்காது, உள்ள ஆறு எல்லாம் உரை என்றான் - (ஆதலால்) நீ உள்ளது உள்ளவாறே (உன் வரலாற்றை யெல்லாம்) கூறுவாயாகவென்று சேதியரசி கேட்டாள்.

(க - து.) தமயந்தியைப் பார்த்துப் ‘பெண்ணே! உன் வரலாற்றைக் கூறாயாயின் உன்பால் கொண்ட வருத்தம் எனக்குத் தீராது, ஆகவே,
என் வரலாற்றையெல்லாம் ஒளியாமல் கூறுவாயாக’என்று சேதியரசி தமயந்தியிடம் கூறினாள் என்பதாம்.

(வி - ரை.) ‘அம் தாமரையிலவள்’ என்பது, அம்+தாமரை+இல்லவள் எனப் பிரிக்க. 1‘பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை’ என்பதனானும் 2‘பூவெனப் படுவது பொறிவாழ் பூவே’ என்பதனானும் அதில் சிறந்தவளான திருமகள் வீற்றிருக்கிறாள் என்பது தமிழர்கொண்ட வழக்கு. எனவே, ஈண்டு அந் தாமரை மேலவள் என்பது திருமகளைக் குறித்தது. தமயந்தியின் அழ

1. திருநாவு, தேவாரம் : 2. நால்வர் நான்மணிமாலை : 40.