|
நளமன்னன். இங்கே உண்மையும் சொல்ல வேண்டும் ; அது
வெளிப்படையாத் தெரியலாகாது. இது
சொல்லின் வன்மை. அம்முறையில் ஆசிரியர் தமயந்தி பேசுவதைக்
காட்டுகின்றார். காட்டில் கண்ட வணிகன் தமயந்தியை, ‘எக்குலத்தாய், யார்
மடந்தை ‘யாதுன்னூர்’ ‘யாதுன் பேர்’ என்று பல
வகையான கேள்விகளைக் கேட்டபோது, அக்கேள்விகளுக்
கெல்லாம் முழுதும் விடை கூறாமல் ‘முடி மன்னன் என்னைப் பிரிய’
என்ற ஒன்றையே கூறி, ஏனையவற்றை யெல்லாம் விரித்துக்
கூறிற்றிலன். இங்கும், முன் வணிகனிடம் சொன்னதையே,
என்னைத் தனிவனத் திட்டெங்கோன் பிரிந்தேக’
என்றதனால் அவள் தன் அடக்கமுடைமை புலப்படுத்தினார். அலமருவேன்,
வந்தேன் என்பன, அவள் தன் துன்ச்செயலைக் குறித்துரைத்தவறாம்.
உண்மையை மறைத்துக் கூறுதலால், மனம் தறுக, அதனால்
வாய் புலர்ந்தது; சொல்லும் தடுமாறியது; இஃது இயல்பாக
நிகழும் நிகழ்ச்சி; இதனால் குறிப்பாக
மறை வெளிப்படுமாறு ஆசிரியர் சித்திரித்த
சொல்லோவியம் அறிந்தின்புறற்பாலன. (142)
சேதியரசி, தமயந்தியிடம் கூறுதல்
321. உன்தலைவன் தன்னை ஒருவகையால் நாடியே
தந்து விடுமளவும் தாழ்குழலாய் - என்றனுடன்
இங்கே இருக்க இனிதென்றாள் ஏந்திழையைக்
கொங்கேயும் தாராள் குறித்து.
(இ - ள்.) கொங்கு ஏயும் தாராள் - மணந் தங்கும்
மலர் மாலையணிந்த சேதியரசியானவள், ஏந்து இழையை
குறித்து - மேன்மையான அணியணிந்த தமயந்தியைப்
பார்த்து, தாழ் குழலாய் - தொங்குகின்ற கூந்தலையுடையாய்,
உன் தலைவன் தன்னை ஒருவகையால் நாடியே - உன்கணவனை
ஒருவாற்றால் தேடச் செய்து, தந்துவிடும் அளவும் - உன்னிடத்தில்
நாங்கள் நேர்க்கும் வரையில், என் தன் உடன் இங்கு
இனிது இருக்க என்றாள் - என்னோடு கூடவே இவ்வரண்மனை
அந்தப்புரத்தில் இன்பத்துடன் இருந்து வருவாயாகவென்று
கூறினாள்.
(க - து.) சேதிநாட்டரசி தமயந்தியைப்
பார்த்து’ ‘தாழ் குழலாய்! உன் கணவனைத் தேடிக்கொண்டு
வந்து உன்னிடம் நாங்கள் சேர்க்கும் வரையில் என்னுடன்
இந்த அரண்மனை அந்தப்புரத்தில் இன்பமாக இருந்து வருவாயாக’
என்று கூறினாள் என்பதாம்.
ந. - 26.
|