பக்கம் எண் :

மூலமும் உரையும்403

பிறந்த பெயர்ச் சொல், தமயந்தியைக் குறித்தது. இவ்வாறு : இதுவும் சுட்டுப் பெயரே. இங்கே மேற் பாட்டில் சேதியரசி ‘என்னுடனே இங்கு இருக்க’ என வேண்டினாளாகலின் அதனையே விளக்கி அண்மைச் சுட்டாக அமைத்துக் கூறினார். இன்னல் உழந்து ஏகுதல் : நாடு நகரங்களை யெல்லாம் சூதாடித் தோற்று அதனால் அரசு நிலை மாறி வறியராகிக் கால் நடையாகக் காடு நோக்கிச் சென்றதைக் குறித்தது. இதனைக் கேள்வியுற்ற வீமமன்னன் தன் அரிய மகளின் நினைவு வந்து வந்து உந்தி வருத்த இவ்வாறு கருதினனென்க. உணர்தி : முன்னிலை ஏவல் ஒருமை. உணர்+த்+இ. உணர் பகுதி, இ, முன்னிலை ஏவல் ஒருமை விகுதி. தகரம் எழுத்துப் பேறு. வேதியின் - வேதத்தை அறிந்தோன், அந்தணன். குன்று - சிறு மலை. தோள் மலை போன்ற கவர்ச்சியும் உயர்ச்சியும் திண்மையும் வண்மையும் உடையதாகலின், வீமன் தோள்களுக்குக் ‘குன்று உறழ் தோள்’ என்று உவமையாக்கிக் கூறினார். உறழ் - உவமவிடைச் சொல்: 1‘போலப் புரைய ஒப்ப உறழ’ எனவரும் நன்னூல் நூற்பாவால் தெளிக. (144)

வீமனால் தேடவிட்ட மறையோன் தமயந்தியைக் கண்டறிதல்

323. ஓடும் புரவித்தேர் வெய்யோன் ஒளிசென்று
நாடும் இடமெல்லாம் நாடிப்போய்க் - கூடினான்
போதில் திருநாடும் பொய்கைக் திருநாடாம்
சேதித் திருநாடு சென்று.

(இ - ள்.) (வீமனால் தேடவிடப்பட்ட வேதியனானவன்) ஓடும் புரவி தேர் வெய்யோன் ஒளி சென்று - விரைந்து செல்கின்ற ஏழு குதிரைகள் பூட்டிய தேரினையுடைய சூரியனது வெளிச்சஞ் சென்று, நாடும் இடம் எல்லாம் நாடி போய் - நுழைகின்ற இடமெல்லாம் தேடிக்கொண்டே சென்று (முடிவில்), போதில் திரு - செந்தாமரை மலரில் வீற்றிருக்கின்ற திருமகளானவள், நாடும் பொய்கை திரு நாடு ஆம் - விரும்புகின்ற நீர் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த செல்வமிக்க நாடான, சேதி திருநாடு சென்று கூடினான் - சேதியென்னும் நாட்டுக்குரிய தலைநகரில் போய்ச் சேர்ந்தான்.

(க - து.) நளன் தமயந்தி இருவரையும் தேடிச் சென்ற மறையவன், சூரியன் ஒளி படுகின்ற இடமெங்குந்

1. நன்னூல் : 367.