பக்கம் எண் :

மூலமும் உரையும்407

போலும் ஒத்தார் உயிர்’ என்பதையும் இங்கே தமயந்திக்கும் மறையவனுக்குஞ் சொன்னதாகக் கொள்க. அவ்விருவரைப் பற்றியே மேல் ‘பொங்க’ என்னும் சொல், ‘கடல் போலும் காதலார்’ என்னுஞ் சொற்றொடரை அவாவித் தழுவு தொடராக அமைந்துள்ளமை யானும் வருத்தங்கொண்டவர்க்குச் செயலறவுபடலானும் உடல் செயற்பாடு நீங்கியவுடன் உயிரும் தன் தொழிலாற்றாது நிற்பது இயற்கையோடொத்திருத்தலானும் இவ்விருவர் செயலுக்கு ஒத்ததாக உரைப்பதே பொருத்தம். நகர மாந்தர்க்கோ, நெருங்கிய உறவினர்க்கோ ஏற்றிக் கூறவது அவ்வளவு பொருத்தமின்றென்பதை ஊன்றி உணர்க. ‘பிறநூன் முடிந்தது தானுடன்படுதல்’ என்னும் உத்தியால், பிற உரை ஆசிரியர் கருத்தைத் தழுவியே மேல் உரையில் நகரமாந்தர்க்கு ஏற்றி உரைத்தாம். காதலார் - அன்புடையார் என்னும் பொருளது. கணவன் மனைவியர் கொள்ளும் காதலன்பன்று. ஈண்டுப் பன்னாள் ஒன்றிப் பழகிய தொடர்பினால் உண்டாய உள்ளக் கசிவையே காதலாகக் கூறியதென்க. குழந்தைகளைக் காதலர் என்னும் வழக்கமும் ஓர்க. மேல், ஆசிரியரே நளன் தன் மக்களிருவரும் காட்டிற்கு வந்தால் வருந்துவரென்று கூறுங்கால் ‘காதல் இருவரையும் கொண்டு கடுஞ்சுரம் போக்கு, ஏத முடைத்து’ எனவும், ‘காத லவர்மேலே கண்ணோட’ எனவும் கூறதல் அறிக. அன்புடையாரை, அன்புக்குரியாரைக் காதலரென வழங்கும் மரபுபற்றி ஈண்டுக் காதலாரெனத் தமயந்தியையும் மறையோனையும் உரைத்தார் எனக் கொண்டு பொருள் கூறுக. (147)

வேதியன், சேதியரசியிடம் தமயந்தி நிலையைக் கூறதல்

326. மாரி பொருகூந்தல் மாதராய் நீபயந்த
காரிகைதான் பட்டதுயர் கண்டாயோ - சோர்சூழலும்
வேணியாய் வெண்துகிலும் பாதியாய் வெந்துயருக்
காணியாய் நின்றாள் அயர்ந்து.

(இ - ள்.) (வேதியன் சேதியரசியை நோக்கி) மாரி பொரு கூந்தல் மாதராய் - மேகம் போலும் கரிய கூந்தலையுடைய சேதி நாட்டரசியே, நீ பயந்த காரிகை பட்டதுயர் கண்டாயோ - நீ பெற்ற பெண்ணாகிய இத்தமயந்தி அடைந்துள்ள துன்பத்தைப் பார்த்தாயோ, சோர்குழலும் வேணிஆய் - அவிழ்ந்து தொங்குகின்ற கூந்தலும் சிக்குற்றுச் சடையாகி, வெண்துகிலும் பாதி ஆய் - (அரையிலுடுத்த) தூய ஆடையும் ஒரு பாதி ஆகி, வெம்துயருக்கு ஆணிஆய் அயர்ந்து நின்றாள் - கொடிய துன்பத்