பக்கம் எண் :

408நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

துக்கு நிலைக்களமாகி வருந்தி நின்றாள். (என்னே! ஊழின் கொடுமை!)

(க-து.) மறையோன் சேதியரசியைப் பார்த்து, ‘சேதி நாட்டு அரசி ! உன் மகள் அடைந்துள்ள துன்பத்தைக் கண்டாயோ ? கூந்தல் சடையாகத் திரண்டது; உடுத்த ஆடை பாதியாயிற்று; துன்பத்துக்கு ஆணிவேர் போலானாள்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) சேதியரசி, தமயந்திக்குச் சிற்றன்னை; அவள் தமயந்தி அன்னைக்கு உடன்பிறந்த தங்கை; ஆயினும், தமயந்தியைக் கண்டு நாளாயிற்று. அதனாலும், காட்டில் திரிந்து பல இன்னலுக்கு உட்பட்ட தன்மையினாலும், நீராடாமலும் மகிழ்வுற்று இருந்தமையாலும் ஓவியம் புகையுண்டதே போல ஒளிமழுங்கியிருந்தாள். அதனால் தமயந்தியின் உறுப்படையாளங்களைச் சேதியரசியால் அறியவொண்ணாததாயிற்று. மறையோன் சிறுபருவமுதல் தமயந்தியின் இயற்கைகளைக் கண்டு இருந்தோனாதலாலும் கூர்ந்து பார்க்கும் திறனாலும் நன்கறிந்தான். ஆதலால், சேதியரசிதமயந்திக்குச் சிற்றன்னை என்பது கொண்டு உரிமை பாராட்டி,
‘நீ பயந்த காரிகை’ என்று அறிமுகப்படுத்தினான் ; அப்பால் அவள் இயற்கைக்குப் பொருந்தாத துன்ப நிலையைப் ‘பட்டதுயர்’ என்றான். பின்னர் அவள் இயற்கை அழகு குன்றித் தன் கணவனைப் பிரிந்து, காதல் மக்களைப் பிரிந்து, துன்பே வடிவாய் அல்லும் பகலும் அழுதவண்ணமாக இருந்ததனால், கூந்தலை வாரி முடித்தாளில்லை; அதில் மலர் சூட்டினாளில்லை; நெற்றியில் பொட்டிட்டாளில்லை; யாதொரு கோலமும் கொள்ளாத நிலையில் கூந்தலுக்கு நெய்யூட்டாததால் கற்றையாகிச் சடைபோல் திரண்டது அக்கண்கொண்டு பார்க்கொணாத கவலைக் காட்சியை, ‘சோர்குழலும் வேணியாய்’ என்று சுட்டிக் கூறி, இந்தமயந்தி அரசியாக நிடதநாட்டில் வாழுங்காலத்தே எத்தனை வகை வகையான ஆடைகள்; அவற்றுள் எத்தனை நிறமுள்ளவை; வேளைக்கு ஓர் ஆடை, வண்ண மகளிர், தோழிகள் அவ்வாடைகளை அழகுபொதுள உடுத்துவிப்பவர். அவ்வளவு செல்வமும் இழந்து இன்று கிழிந்த ஒரு பாதி ஆடை யென்பானாய் ‘வெண்துகிலும் பாதியாய்’ என்று எடுத்துக் கூறி, இறுதியில் மகிழ்வுக்கு இருப்பிடனாக இருந்த இவள் - இன்பத்துக்கு உறையுளாக இருந்த இவள் - இற்றைஞான்று எந்நிலையிலுள்ளாள். கொடிய துன்பச்சூழல் தொடரத் துயருக்கே நிலைக்களனாக நிற்கின்றாள் என்பதை உணர்த்துவானாய், ‘வெந்துயருக்கு ஆணியாய் நின்றாள்’ என்றான். சேதியர