|
சிக்குத் தமயந்தி உயர்நிலையிலிருந்து
இன்று மிகத் தாழ்ந்த அவல நிலையைக் குறித்துக் கூறித்
தமயந்தியை அறிமுகப்படுத்தியுரைத்தான். ‘சோர்குழலும்’
என்பதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பாதலோடு, பிற
உறுப்புக்களும் புனையாமையால் ஒளிகுன்றியிருப்பதையும் விளக்கிச் ‘சுருங்கச்
சொல்லல்’ என்னும் அழகு தோன்ற நின்றது. அன்றிச் சோர்குழலும்,
வெண்துகிலும் என எண்ணும்மையாகக் கூறினும் பொருந்தும்.
ஆணி - நிலைக்களம். பற்றுக்கோடு. ஆணி, இப்பொருள்
தருதலை,
1‘ உழுவார் உலகத்தார்க் காணி’ என்றும், 2‘உருள்பெருந்தேர்க்
கச்சாணி’ என்றும் வரும் திருவள்ளுவர் திருமொழியால்
நன்குணரப்படும். (148)
சேதியரசி, தமயந்தியைத் தன் மகளென்
றறிந்தபின் வருந்தல்
327. தன்மகள் ஆவ தறியாத் தடுமாறாப்
பொன்வடிவின் மேலழுது போய்விழ்ந்தாள் - மென்மலரைக்
கோதிப்போய் மேதி குருகெழும்பும் தண்பணைசூழ்
சேதிக்கோன் தேவி தகைத்து.
(இ - ள்.) மேதி - எருமைகள்,
மெல்மலரை கோதிபோய் - மெல்லிய தாமரை முதலிய
பூக்களைத் தம் கொம்புகளால் விலக்கிக்கொண்டே
சென்று, குருகு எழுப்பும் தண்பணைசூழ் - நாரை கொக்கு
முதலிய நீர்வாழ் பறவைகளை எழுப்பி ஓடச்
செய்கின்ற நீர்நிறைந்த வயல்கள் சூழ்ந்த,
சேதிகோன் தேவி - சேதிநாட்டு மன்னனுடைய
மனைவியான சேதியரசி, திகைத்து - (மறையவன் தன்
மகளென்று தமயந்தியைப்பற்றி விளக்கிக் கூறிய
சொற்களையெல்லாம் கேட்டு) மயக்கங்கொண்டு, தன்
மகள் ஆவது அறியா - அவள் தன் மகளென்பதை அறிந்து
கொண்டு, தடுமாறா - தத்தளிப்படைந்து,
பொன்வடிவின் மேல் அழுதுபோய் வீழ்ந்தாள் -
தமயந்தியின் பொன்மயமான உடலின் மேல்
அழுதுகொண்டே போய் வீழ்ந்தாள்.
(க - து.) சேதியரசி மறையவனால்
தமயந்தியைத் தன் மகள் என்று கூறியதைக் கேட்டுத்
தத்தளித்து மயங்கி அழுதுகொண்டே போய் அவள்மேல்
விழுந்தாள் என்பதாம்.
(வி - ரை.) அறியா தடுமாறா என்பன
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். 3‘தாழாத்
தளராத் தலைநடுங்காத்
1, 2. திருக்குறள் : 1032 ; 667. 3. நாலடியார் :
14.
|