அன்னம், தமயந்தி விமராசன் மகள்
எனல்
38. எழுவடுதோள் மன்னா இலங்கிழையேர்
தூண்டக்
கொழுஙதியிற் சாய்ந்த குவளை - உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும்
மாடொலிநீர் நாடன்
கொடைவிதர்ப்பன் பெற்றதோர்
கொம்பு.
(இ - ள்.) எழு அடு தோள் மன்னா -
தூணைவென்ற தோள்களையுடைய வேந்தே ! இலங்கு இழை -
(நான் சொன்ன அந்த) ஒளியெறிக்கின்ற
அணிகளையணிந்த பெண்ணானவள், உழுநர் ஏர் தூண்ட -
உழவர்கள் ஏரில்பூட்டிய மாடுகளைத் தூண்டி நடத்த,
கொழுநுதியில் சாய்ந்த குவளை - (அப்போது)
கொழுவின் முனையால் கீறப்பட்டுச் சாய்ந்து
கீழ்வீழ்ந்த குவளை மலர்களை, மடை மிதிப்ப
தேன்பாயும் - நீர்வரும் மடைகளில் அவர்கள்
காலால் மிதித்தலினால் அதிலுள்ள தேன்வழிந்து
பாய்ந்தோடுகின்ற, மாடு ஒலி நீர் நாடன் -
வயற்புறங்களில் நீர் ஓடுகின்ற ஒலிகள் மிக்க
நீர்வளப்பம் பொருந்திய நாட்டையுடையவனாகிய,
கொடை விதர்ப்பன் பெற்றது ஓர் கொம்பு -
ஈகையிற் சிறந்த விதர்ப்ப நாட்டு மன்னன்
பெற்றெடுத்து வளர்த்த ஒப்பற்ற பூங்கொம்பு
போன்றவள் ஆவாள்.
(க - து.) அன்னம் நளனை நோக்கி ‘அரசனே
! நான் கூறிய பெண் விதர்ப்பநாட்டு மன்னன் வீமன்
பெற்றெடுத்த கொம்புபோல்பவள் ’ என்றது.
(வி - ரை.) ‘எழு’ எழுதல்: உயர்தல்
என்னும் பொருட்டாய் உயர்ந்துள்ள தூணைக் குறித்தது
; ஓங்கல் என்பது, மலையைக் குறித்தல்போல. அடு -
அடுதல்: முதனிலைத் தொழிற்பெயர். தன்
உயர்ச்சியாலும் வலிமையாலும் தூணை அழித்தது
என்பதாகும். ஒத்த என்று பொருள்கூறல், சிறப்பன்று.
ஏர் - ஏரிற்பூட்டிய எருதுகள் : ஆகுபெயர். குவளை :
ஆகுபெயர். கொடை விதர்ப்பன் -‘வேண்டுவார்
வேண்டுவதே ஈயும் பண்பாளன்,’ என, அரசன்
கொடைத்திறம் கூறலால், உனக்கும் இம்மங்கையைக்
கொடுப்பான் என்னும் தன் உள்ளக் கருத்தை அன்னம்
அரசனுக்குக் குறிப்பால் உணர்த்திற்று. பூங்கொம்பு
- மலருள்ள கொம்புபோல்வாள். அம்மையின் திருவுருவைக்
கூறப்போந்த பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற்
புராணத்தள் 1‘குமிழலர்ந்த
செந்தாமரைக் கொடி’ என்றதூஉங் காண்க. அதுபோல்
‘ஓர்கொம்’பென்றா ரெனக் கொள்க. (31)
1. திருவிளை, நகரப்:
|