பக்கம் எண் :

மூலமும் உரையும்43

தமயந்தி பெண்ணரசு செய்கிறாள் எனல்

39. நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.

(இ - ள்.) நால்குணமும் நால்படையா - (நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும்) நான்குவகைக் குணங்களுமே (தேர், யானை, குதிரை, காலாள் என்னும்) நான்குவகைச் சேனைகளாகவும்,’ ஐம்புலனும் நல் அமைச்சா - (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்) ஐம்பொறிகளின் வழிச்செல்கின்ற அறிவே சிறந்த அமைச்சர்களாகவும், ஆர்க்கும் சிலம்பே அழகிய பேரிகையாகவும், வேல் படையும் வாளுமே கண்ஆ - வேற்படையும் வாட்படையும் ஆகிய இரண்டுமே இரு கண்களாகவும், வதன மதி குடைகீழ் - முகமாகிய நிலாவட்டக் குடையின்கீழாக, பெண்மை அரசு ஆளும் - அவள் பெண் இயல்பாகிய அரசை ஆட்சி செய்கின்றாள்.

(க - து.) தமயந்தி தன்னுடைய நாற்குணம் முதலியவைகளையே நாற்படை முதலியனவாகக்கொண்டு பெண்ணரசாள்கின்றாள் என்பதாம்.

(வி - ரை.) நாற்குணம் : பெண்மக்கட்கு இன்றியமையாத நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகள். இவைகளுள், நாணம் என்பது இயற்கையாகப் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள வெட்கம். இதனை வள்ளுவர் 1‘திருநுதல் நல்லவர் நாண்’ என்பர். 2‘உயிரினும் சிறந்தன்று நாண்’ என்றார் தொல்காப்பியர். மடம் என்பது, அறிந்தும் அறியாதுபோன்றிருக்கும் தன்மை. இதனைக் 3‘கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை’ என்பர் நச்சினார்க்கினியர். அச்சம் என்பது, அஞ்சவேண்டுபவைகட்கு அஞ்சி நடக்கும் தன்மை. இதனை, 4‘அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ என்பர் வள்ளுவர். இதனை, 5‘அன்பு காரணத்தால் தோன்றிய உட்க’ என்பர், நச். பயிர்ப்பு என்பது, 6‘கண்டறியாதன கண்டுழி மனங்கொள்ளாத பயிர்ப்பு ; (அரு

1. திருக்: 1011. 2. தொல், பொருள்: 13.
3. தொல், பொருள் : 99. நச்சினார்க்கினயர் உரை.
4. திருக்: 428. 5, 6. தொல், பொருள் : 99.