|
கொண்டதே வெண்ணீறென்பதுமாம்.
பின்னும் இதுகுறித்து மருத்துவ முறைப்படி
நோக்கினாலும் நீராடியவுடன் திருநீறணிந்தால்
நீரினால் ஏற்படும் நீர்ப்புணர்ப்பு முதலியவற்றை
அணுகவிடாது தடுப்பதுடன், கெட்ட சொறி முதலியன
வாராது காக்கும் மருந்துமாம். இவ்வளவு கொள்கையும்
இன்னும் பல்வகை நலனுஞ் சான்றதே திருநீற்றின்
மேன்மையாகும். இதை இக்கால அறிஞரும் பிறரும்
அறியாது மயங்கி, மணப் பொடியாக மேல்
நாட்டிலிருந்து வரும் வெண் பொடியை முகத்தினும்
உடலினும் அப்பிக்கொண்டு தம்முகப் பொலிவையும் உடற் செம்மையையும் கெடுப்பர் ;
என்னே உலக அறியாமை ! மணம் வேண்டு மேல்
இந்நீற்றினும் ஊட்டி அணியலாமன்றோ ? இஃதோர்
சமயக் குறியாகக் கொள்ளப்பெறினும் அதனால் வரும்
நலம் பெரிது; யாவர்க்கும் வேண்டற்பாலதென்க.
எனவே, இத்தகைய திருநீறணிவார்
உள்ளம், பண்பட்ட உள்ளம் . அது பனிங்குபோல்
களங்கமற்று மிளிரும்; களங்கமற்ற தூய உள்ளத்தில்
சிவபெருமான் உறைவான் என்பது, மனமெனும் புனத்தை
வறும் பாழாக்காது இறைவனையே எக்காலும்
நினைந்துகொண்டிருக்கும் தன்மையை. இச்சீரியார்
மனம் களங்கமில்லாததாகலான், அவ்வுள்ளத்தில்
இறைவன் என்றும் நின்றருளுவன். நீதிஆர் பெம்மான்
என்பது நீதிநெறி என்பன எல்லாம் சிற்றறிவும்
சிறு தொழிலும் உடைய ஆன்மாக்கள் அறியாரன்றே;
அவன் உணர்த்தவே அறியுமன்றோ ? அவனிடத்திருந்தே
யாவுந்தோன்றின என்பாராய், இதைக்
கிளந்தெடுத்துரைத்தார். அமரர் -
அமர்ந்திருப்பவர், அஃதாவது எக்காலத்தும் இறவாது
வாழ்பவர்; அவர்கட்கெல்லாம் தலைவன் என்பது
தான் இறவாது உலகைக்காத்தும் படைத்தும் கரந்தும்
விளையாடும் அவன்றன் முழுதல் தன்மையை. இதனை,
1‘ நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடிநா ராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்
ஈறில் லாதவன் ஈசன் ஒருவனே
எனவும்,
2‘எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
கண்ணுதல் எந்தை கடைத்தலையில் நின்றதற்பின்
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
பண்மிசை மால்பலர் மாண்டனர்காண்’
எனவும் வரும் பெரியார்
திருமொழிகளானும் உணர்க.
1. திருநாவுக், தேவா : 2. திருவாசகம்,
திருத்தோள் : 9.
|