|
ளும் நளனைச் சுடாத - வெப்பந்தராத
வரங்கொடுத்தான். அதை
நளன் ஈண்டுக் கருதினானென்க. கருதினவன், பாம்பின்
பக்கலிலே
நெருப்பு மிக்க இடத்தே சென்றான் ; நளன்
வந்ததைக் கண்ட நெருப்புக்கடவுள் தான் கொடுத்த
வரத்தை யெண்ணினான் ; தன் சுடுந்தன்மையைக்
குறைத்தான் ; அதனால் நளன் நெருப்புத் தணல்களுக்கு
ஊடே அஞ்சாது சென்றான். இக்கருத்துக்களை அமைத்து,
‘ஆரழலோன் அஞ்சி........புக்கான்’ என்றார்.
உடைந்தான் என்பது இங்கே நெருப்பின் சுடுந் தன்மை
குறைந்து நின்றதைக் குறித்தது. அதனால் தன் வேகந்
தணிந்தான் என்று பொருள் கூறப்பட்டது. புக்கான் -
சென்றான். தன்னொற்றிரட்டிப் பகுதியே இறந்த
காலங்காட்டிற்று. (5)
பாம்பு, நளனை நோக்கித் தன் வரலாறு
உரைத்தல்
339. வேத முனிஒருவன் சாபத்தால் வெங்கானின்
ஆதபத்தின் வாய்ப்பட் டழிகின்றேன்-காதலால்
வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு
சந்தெடுத்த தோளானைத் தான்.
(இ - ள்.) (பாம்பு மன்னன்) மாலை
மணிவண்டு சந்து எடுத்த தோளானை தான் -
மலர்மாலையிலுள்ள அழகான வண்டுகளானவை
இசைப்பாடல் பாடுகின்ற தோள்களையுடைய நளமன்னனை
நோக்கி, வேதமுனி ஒருவன் சாபத்தால் - மறைப்
பொருளுணர்ந்த முனிவன் ஒருவனுடைய
கெடுச்சொல்லினால், வெம்கானில் ஆதபத்தின்
வாய்பட்டு அழிகின்றேன் - இக்கொடிய
காட்டினிடத்தில் நெருப்பினுள்
அகப்பட்டுக்கொண்டு வருந்துகின்றேன், காதலால்
வந்து எடுத்து கா என்றான் - (என்பால்) அன்புகொண்டு
(என் அருகில் வந்து என்னை இந்நெருப்பினின்றும்)
எடுத்துவிட்டுக் காப்பாயாக என்று வேண்டினான்.
(க - து.) பாம்பு அரசனானவன்,
நளமன்னனைப் பார்த்து ‘வேதப்பொருளறிந்த ஒரு
முனிவன் கெடுமொழியினால் நான்
இந்நெருப்பின்வாய்ப்பட்டு வருந்துகிறேன்; என்னை
எடுத்துக் காப்பாற்றுக’ என்று வேண்டிக்கொண்டான்
என்பதாம்.
(வி - ரை.) வேதமுனி -
மறைப்பொருளறிந்தவன். ஒருவன் -
ஒப்பற்றவனென்றலுமாம். ஒப்பற்றவன், வெகுண்டு
கூறினும் அருளிக் கூறினும் அப்பயனைத்தரும்
சொல்லாற்றல் மிக்க சிறப்புள்ளவன்.
முனிவராவார் மனத்தைப் புலன்வழிச் செல்ல
|