|
விடாது அடக்கி ஆளும் தகுதியுடையார்.
அவர் வெகுண்டால் அவ்வெகுளியால் ஆகும் தீங்கைத்
தாங்கவொண்ணாது எத்தகைய ஆற்றலுடையார்க்கும்
என்பர், திருவள்ளுவப்பெருமான்.
1‘குணமென்னும் குன்றேறி நின்றார்
வெகுளி
கணமேயும் காத்தல் அரிது’
2‘ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.’
என்பவாகலான், வேதமுனி ஒருவன்
சாபத்தால் என்றானென்க.
காடு கொடுங்காடு, நினைப்பினும்
நினைந்த நெஞ்சையும் சுடும் வெப்ப மிக்க இடம்.
அதில் செல்லுதலோ, தங்குதலோ இயலாதது.
அந்தக்கொடிய காட்டில் வெப்பத்துக்குமேல்
வெப்பமான நெருப்பு ; அதனுள் அகப்பட்டுக்கொண்டு
தத்தளிக்கின்றேன் என்பானாய் ‘வெங்கானின்..........
அழிகின்றேன்’ என்றான். துயருற்றார் ஒருவர்,
அத்துயர் தீர்ப்பதற்கு அத்துயரின்
கொடுமையையெல்லாம் அத்துயர் தீர்ப்பார்
உளங்கொள்ளுமாறு விளக்கியெடுத்துச்
சொல்லவேண்டுமாகலான், அம்முறைமை தோன்ற
விரித்துக் கூறினான். காதல் - அன்பு. முன்பின்
தொடர்பில்லையாயினும் ஒருவர்க்குத்துன்மபம்
நேர்ந்த காலத்தில் காக்குதல் வேந்தர்கள் கடன்
; அன்றியும் அறமுமாகும் என்பதை விளக்க, ‘காதலால்
வந்தெடுத்துக்கா’ என்றான் என்க. (6)
அப்பாம்பு, நீ தொட்டால் என்
சாபந்தீரு’மென நளனை
வேண்டுதல்
340. சீரியாய் நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன்
கூருந் தழலவித்துக் கொண்டுபோய்ப் - பாரில்
விடுகென்றான் மற்றந்த வெந்தழலால் வெம்மைப்
படுகின்றான் வேல்வேந்தைப் பார்த்து.
(இ - ள்.) அந்த வெம் தழலால்
வெம்மை படுகின்றான் - அக்கொடிய
காட்டெரியினால் வேகின்றவனாகிய
அப்பாம்பரசன், வேல் வேந்தை பார்த்து -
வேற்படைகொண்ட நளமன்னனைப் பார்த்து, சீரியாய்
நீ எடுப்ப தீமை கெடுகின்றேன் - மேன்மைக்
குணமுடையோய்! நீ என்னை வந்து தொட்டு
எடுப்பாயானால்
1, 2. திருக்குறள் : 29; 899.
|