|
வனுமான நளமன்னன், எடுத்து அரவு அரசை
கொண்டு அகன்றான் - அக்கார்க்கோடகனைத் (தன்
கைகளால்) தூக்கிக் கொண்டு அவ்விடத்தைவிட்டுச்
சென்றான்.
(க - து.) அப்பாம்பரசன், அவ்வாறு
வேண்டிக் கொண்டபோதே நளமன்னன் அவனைத் தன்
கைகளால் தூக்கி எடுத்துக்கொண்டு
அவ்விடத்தைவிட்டு நீங்கிச் சென்றான்
என்பதாம்.
(வி - ரை.) என்று என்னும்
இடைச்சொல், மேற் கூறியதைக் குறித்து நின்றது. ஏழு
உலகு - எல்லா நாடுகளையும் என்னும் பொருளது.
சூழ்கடல்: வினைத்தொகை. கடல் சூழ்ந்த
உலகையெல்லாம் தன் குடைக்கீழ் அடக்கியாண்ட
நளமன்னன் சிறப்பைக் குறிக்க ‘குன்றும் சுமந்த
குலப்புயத்தான்’ என்றார். குலப்புயம், போரென்ன
வீங்கும் பொற்புடையதென்னும் கருத்துக்கொண்டது.
ஆரணியம்: வடசொல், பெருங்காடு. இரவு - இருள். அரசு -
அரசன்போன்றது. இரவு சிறந்ததென்னும் பொருளது.
சிறந்த தென்னையெனின் இருள் கன்னங்கரேலெனக்
கட்புலன் கதுவாதவாறு செறிந்து நிறைந்திருத்தல்.
அந்த இருளினும் அஞ்சாது தமயந்தியைவிட்டுவிட்டுத்
தன்னந் தனியாக ஊக்கத்துடன் சென்ற நளனுடைய
மனத்திண்மை நிலைதோன்ற ‘இரவரசை வென்றான்’
என்றார். வெல்லுதல் - ஈண்டு அதனைப்
பொருட்படுத்தாது செல்லல். (8)
அரவரசன், பத்துவரை எண்ணித் தன்னைக்
கீழே விடுமாறு
நளனை வேண்டல்
342. மண்ணின்மீ தென்றனைநின் வன்தாளால் ஒன்றுழதல்
எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர்
மாவலான் செய்த உதவிக்கு மாறாக
ஏவலால் தீங்கிழைப்பேன் என்று.
(இ - ள்.) போர்மா வலான் -
போர்க்குதிரைகளின் மன நிலையறியும்
தன்மையுடையவனாகிய நளமன்னன், நண்ணி செய்த
உதவிக்கு மாறு ஆக - தன் பக்கலில் வந்து தனக்குச்
செய்த நன்றிக்குக் கைம்மாறுதவியாக, ஏவலால்
தீங்கு இழைப்பேன் என்று - நளன் கட்டளையாலாயே
அவனுக்கு (நன்மை தரும்) தீமையைச் செய்வேனென்று
துணிந்து, மண்ணின் மீது - இப்பூமியிடத்தில்,
என்தனை நின் வன்தாளால் ஒன்று முதல் - என்னை நீ
உன்னுடைய வலிமையுள்ள கால்களினால் ஒன்று முதலாக,
தச
ந. - 28
|