|
என்று இடுக என்றான் - பத்து வரை
எண்ணிக்கொண்டு தசவென்று கூறி விடுக என்று
(பாம்பரசன்) நளனை வேண்டினான்.
(க - து.) பாம்பரசன் நளனை நோக்கி,
நளன் செய்த நன்மைக்குக் கைம்மாறு தீங்கு செய்து
நன்மை இழைப்பதாக முடிவு செய்து ‘நீ ஒன்று முதல்
பத்து வரை எண்ணி உன் கால்களினால் தசவென்று
சொல்லி என்னைக் கீழே விடுக’ வென்று வேண்டினான்
என்பதாம்.
(வி - ரை.) மண்ணின் மீது - பூமியில்,
தன்னை விடும்படி கார்க்கோடகன் வேண்டினான்.
அவன் கடிப்பது நன்றி செய்தார்க்குத் தீமையே யென
உலகோர் கொள்ளக் கிடக்கின்றது; ஆயினும்
அதனால் பின் நளனுக்குப் பல்வகை உதவி
கிட்டுதலால் ‘உதவிக்கு மாறாக........
தீங்கிழைப்பேன்’ என்ற சொற்களாற்
குறித்தார். வன்தாள் - வலிமை செறிந்த தாள். தச
என்னும் வட சொல் பத்து என்னும் எண்ணுப்
பெயரையும், கடிக்க, (தீண்டுக) என்னும் ஏவல்
வினையையும் குறிப்பது. இதனால் ‘என்னை நீ கடி’
என்று நளனானவன் வேண்டிக் கொண்டதுபோற் கொண்டு
அவன் கட்டளைப்படியே செய்தேன் ; தான் மாறாகச்
செய்யவில்லை என்பது தோன்ற ‘தச வென்றிடுக’ என
வேண்டிக் கடிக்கத் தனக்கு உரிமை பெற்றுக் கொள்ள
ஓர் சூழ்ச்சியைத் தேடிக்கொண்டான் என்க.
நளன் குதிரை இலக்கணம் அறிந்து
குதிரைகளை நன்கு செலுத்துவதில்
சிறந்தவனென்பதைக் காட்ட ‘மாவலான்’ என்றார்.
வல்லான், வலான் தொகுத்தல் விகாரம். (9)
அப்பாம்பு நளனைக் கடித்தல்
343. ஆங்கவன்றான் அவ்வா றுரைப்ப அதுகேட்டுத்
தீங்கலியால் செற்ற திருமனத்தான் - பூங்கழலை
மண்ணின்மேல் வைத்துத் தசவென்று வாய்மையான்
எண்ணினான் வைத்தான் எயிறு.
(இ - ள்.) ஆங்கு அவன் அவ்வாறு
உரைப்ப - அவ்விடத்தில் அவ்வரவரசன் அவ்வாறு கூற,
தீகலியால் செற்ற திருமனத்தான் அதுகேட்டு -
தீமையை யுடைய கலிமகனால் தன்வயமாக்கப் பெற்ற
மேன்மைக் குணமுடையவனாகிய நளமன்னன் அதைக்
கேட்டு, பூகழலை மண்ணின் மேல் வைத்து - தன் அழகிய
கால்களை நிலத்தின் மேல் வைத்து, வாய்மையால் -
உண்மை
|