|
என்று நம்பியதால், தச என்று
எண்ணினான் - (ஒன்றென்று தொடங்கிப்) பத்தென்று
எண்ணிக் கணக்கிட்டான், எயிறு வைத்தான் - (உடனே
பாம்பரசன்) தன் நச்சு நிறைந்த பல்லை வைத்து (நளன் காலில்)
தீண்டினான் ; (கடித்தான்.)
(க - து.) பாம்பரசன் சொன்ன
மொழியைக் கலியின் வயப்பட்டதனால் உண்மையென
நம்பிய நளன், ஒன்றென்று தொடங்கிப்
பத்தென்றெண்ணினான் ; உடனே பாம்பரசன் தன்
நச்சுப்பற்களை நளன் கால்களில் வைத்துக்
கடித்தான் என்பதாம்.
(வி - ரை.) தீக்கலி: தீங்கலியென
எதுகை நோக்கி மெலிந்து நின்றது. செற்ற - கெடுத்த :
தன் இயற்கைநிலையை மாற்றிய என்னும் பொருளில்
வந்தது. திருமனம் - சிறந்த மனம். அதனையுடைய நளன்
எனக் குறிப்புவினையாலணையும் பெயர். தசம் - பத்து.
மேற் பாட்டில் அரவரசன் வேண்டியவாறு ஒன்றுமுதல்
துவங்கிப் பத்தென்பது வரை எண்ணியதைக் குறித்தது.
எயிறு - பல். நஞ்சு நிறைந்தது பாம்பின் பற்கள்
ஆனதால், நச்சுப் பல் என்று பொருள் கூறப்பெற்றது.
வைத்தான் என்பது கடித்ததைக் குறித்தது. காரணப்
பொருள் காரியப் பொருளாக வந்தது.
1‘கலுழன்மேற் சரணம் வைத்தான்’
என்னும் கம்பர் கருத்தும்
இதனோடொப்ப வருதலை ஓர்க. (10)
பாம்பு கடித்ததால் நளனது திருமேனி
குறுகுதல்
344. வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா
வாம நெடுந்தோள் வறியோருக் - கேமம்
கொடாதார் அகம்போல் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திருமேனி வெந்து.
(இ - ள்.) மெய்ம்மை விடாதான்
திருமேனி வெந்து - உண்மை நெறியைக் கடவாதவனாகிய
நளமன்னனுடைய அழகான உடல் (நஞ்சினால்) கருநிறமாக
மாறி, வீமன் திருமடந்தை - வீம மன்னனுடைய செல்வ
மகளாகிய தமயந்தியினுடைய விழி முடிய கண்டு அறியா
வாம நெடும் தோள் - கண்களும் முழுவதும் கண்டு
அறியவொண்ணாத (நளனின்) அழகு பொருந்திய
1. கம்பரா, பால, திருவவதார் : 25.
|