பக்கம் எண் :

436நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

நீண்ட தோள்கள், வறியோருக்கு ஏமம் கொடாதார் அகம்போல் குறுகிற்று - இரப்போர்க்கு பொருள் ஈயாத உலோபர் தம் இல்லத்தின் செல்வம் சுருங்குவதுபோல் குறுகிப் பொலிவிழந்தன.

(க - து.) நளன் உடலானது நஞ்சு உடலிற் சேர்ந்தவுடன் தீயப் பெற்றுக் கருகிப்போனதுமன்றி, உலோபரின் செல்வவளம் சுருங்குவது போலத் தோள்களும் குறுகின என்பதாம்.

(வி - ரை.) வீமன் திருமடந்தை - வீமனுடைய திருமகள் போன்ற அழகு மிக்க மகளென்றலுமாம். ‘விழிமுடியக் கண்டறியா........தோள்’ என்பது நளனுடைய தோற்றப் பொலிவும் அழகும் மிக்கன வென்பதை விளக்கி நின்றது. அழகிற் சிறந்த ஆடவர் பெண்களின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும், அவ்வவர்பாற் காதலுற்றார்க்குக் காண்டொறும் காண்டொறும் புதுப் புதுத் தோற்றமுடையனவாய் அழகின் செறிவு மிக்கனவாய்க் காணக் கிடக்குமாதலின், இங்கே நளன் தோளழகைப் பன் முறை பார்த்துப் பார்த்துக் களித்தும் அவளால் அதன் அழகெல்லையை வரையறுக்க வொண்ணாததாய் மேலும் மேலும் புத்தம் புதிய தோற்றமும் அழகுந் தந்து அவள் கண்களுக்கு விருந்தளித்தலின் இவ்வாறு கூறினாரென்க. அயோத்தி யேந்தல் இராமபிரானின் திருவுலாக் காட்சியைக் கண்ட நங்கையர் பலர், அவன் அழகில் ஈடுபட்டு விழித்த கண் விழித்தபடியே எழுது சித்திரம் போல நின்று தாம் தாம் கண்ட அவன் உறுப்புகள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துப் பின் வேறு உறுப்புக்களைக் காண்டற்கு இயலாத நிலையில் அவன்றன் ஓருறுப்பைக் கண்டார்க்கு அவ்வொன்றே நிரம்பக் கண்டு முடிக்க வொண்ணாத பேரழகியதாய் இருந்ததாகக் காட்டி இராமன் வனப்பைச் சித்திரித்த காட்சி இக்கருத்தோடொப்ப இருத்தலின், அதனையும் ஈண்டெடுத்துக் காட்டுகின்றாம்:

1‘தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழற் கமலமன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கைகண் டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்’

என்பதது. ஏமம் - பொன்; பணம். பாம்பு கடித்து நஞ்சு நளன் உடலில் கலந்தவுடன், அவன் அழகிய நிறம் மாறிக் கருநிற

1. கம்பரா, பால, உலாவியற்: 19.