பக்கம் எண் :

மூலமும் உரையும்439

1‘கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்’

என்பர் திருவள்ளுவரும். தவறாது வெல்லுதல் என்றது தன்னை எதிர்த்த பகைவரைத் தன் ஆற்றலால் கொன்று வாகை மாலை சூடுகின்ற வெற்றிப் பெருமிதத்தை. இலங்கை வேந்தன், இராமபிரானால் முறியடிக்கப் பெற்றுத் தன் தலைகள் அறுபட நின்ற காலை அவன்றன் மேன்மையை - வீர மேம்பாட்டை,

2‘வெல்லுமத்தனை அல்லது தோற்றிலா விறலோன்’

என்று கம்ப நாடர் குறித்ததும் அறிக. அம் முறையில் நளன் தோற்றிலா விறல் தோன்ற, அவன் வேல்மேலேற்றி ‘கூற்றழைக்கும் வேல் வேந்து’ என்றார்.

3‘நிரேந்தி நெய்ம்மிதந்து நிணம்வாய்ப் பில்கி அழல்விம்மிப்
போரேந்திப் பூவணிந்து புலவு நாறும் புகழ்வேலோன்’

என்று பிறரும் வேல்மேல் ஏற்றிக் கூறுதலானும் அறிக.

அத்தகை ஆற்றலான் ஊழ் வலியால் இன்று பாம்பரசனால் பற்றப்பட்டான் ; என்னே உலக நிலைஎன்னும் அவலக் குறிப்புத் தோன்ற அமைத்தார் ஊழின் வலியை உணர்த்தியவாறுமாம். (12)

பாம்பரசன், நளனை நோக்கி, ‘உன் உருவை மாற்றவே
கடித்தேன்’ எனல்

346. காயும் கடகளிற்றாய் கார்க்கோ டகன்என்பேர்
நீயிங்கு வந்தமை யான்நினைந்து - காயத்தை
மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா
வேறாக்கிற் றென்றான் விரைந்து.

(இ - ள்.) (பாம்பு மன்னன் நளனை நோக்கி) காயும் கடகளிற்றாய் - (பகைவரைச்) சினக்கும் மதம் பொருந்திய ஆண்யானையை யுடைய வேந்தே, என்பேர் கார்க்கோடகன் - என்னுடைய பெயர் கார்க்கோடகனென்பது, இங்கு நீ வந்தமை யான் உணர்ந்து - நீ இக்காட்டிற்கு வந்ததை நான் தெரிந்துகொண்டு, காயத்தை மாறு ஆக்கிக் கொண்டு - நீ உன் உடல்நிறத்தை வேறுருவமாக்கியிருந்து, மறைந்து உறைதல் காரணமா - மறைந்து வாழ்வது காரணமாக, வேறு ஆக்கிற்று என்றான்

1. திருக்குறள் : 894. 2. கம்பரா, உயுத்த : 248.
3. சீவகசிந், முத்தி : 1.