பக்கம் எண் :

மூலமும் உரையும்441

கொண்டாய் (அதற்குக் கைம்மாறாக), இந்த அணி ஆடை கொள்க என்றான் - இந்த அழகிய ஆடையைப் பெற்றுக் கொள்க என்று கூறி வேண்டினாள்.

(க - து.) கார்க்கோடகன் நளனை நோக்கி, ‘கொடிய காட்டில் நீ நெருப்புக் கனலைப் பொறுத்துக்கொண்டு என்னைக் காப்பாற்றினாய் ; அதனால் அதற்கு ஈடாக இந்த ஆடையைப் பெற்றுக்கொள்’ என்றான் என்பதாம்.

(வி - ரை.) கூன் - வளைவு. இறால் - இறால் என்னும் ஒருவகை மீன். நீர் நிலையில் வாழ்கின்ற இறால் மீன்கள் துள்ளுதலால், அந்நீரில் படர்ந்து கிடக்கின்ற குவளைக் கொடிகளில் மலர்ந்துள்ள பூக்களில் உராயப் பெற்று அதில் நிறைந்து பெருகி நிற்கின்ற தேன் இறாலிலிருந்து ஒழுகுவதுபோல ஒழுகித் தவளை வாய்க்குட் செல்லுகின்றன என்பதில், நாட்டின் நீர் வளன், நிலவளன் ஏற்றங் கூறி, நிடத நாட்டின் சிறப்பையும் குறித்தவாறாம். இறால் முன்னது மீனும் பின்னது தேன் கூடும் ஆம். அணி ஆடை - அணிகின்ற ஆடை, அல்லது அழகிய ஆடை என்றலுமாம். ஆங்கு, அவ்விடத்து என்றேனும் அல்லது அசைநிலையாக வேனும் கொள்க. (14)

கார்க்கோடகன், அவ்வாடையின் பயன் கூறல்

348. சாதி மணித்துகில்நீ சாத்தினால் தண்கழுநீர்ப்
போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின்
துளிக்குநா நீட்டும் துறைநாடர் கோவே
ஒளிக்குநாள் நீங்கும் உரு.

(இ - ள்.) தண் கழு நீர் போதின் கீழ் மேயும் புதுவரால் - (கார்க்கோடகன் நளனை நோக்கி) குளிர்ச்சி பொருந்திய செங்கழுநீர் மலரின் கீழே மேய்கின்ற இளவரால் மீன்களானவை, தாதின் துளிக்கு நா நீட்டும் துறை நாடர் கோவே - அம்மலர்களின் தேன் துளிகட்குத் தம் நாக்கை நீட்டுகின்ற நீர்வளமிக்க துறைகளையுடைய நிடத நாட்டுக்கு வேந்தே !, ஒளிக்கும் நாள் - (நீ) மறைந்துறையுங் காலத்து, சாதிமணி துகில் நீ சாத்தினால் உரு நீங்கும் - உயர்ந்த மாணிக்கம் போன்ற இந்த ஆடையை அணிந்தால் இவ் வேற்றுருவம் போகும். (உன் இயற்கையுருவம் வரும் என்றபடி.)

(க - து.) கார்க்கோடகன் நளனை நோக்கி, ‘நிடத நாட்டு வேந்தே ! நீ மறைந்து உறைந்து வெளிப்பட வர