|
(க - து.)நளமன்னனானவன்,
கார்க்கோடகன் செய்த உதவியையே தனக்குத்
துணையாகத் துணையாகக் கொண்டு முட்புதர்கள்
மண்டிக்கிடக்கின்ற அக்காட்டின் வழியாகக்
சென்றான் என்பதாம்.
(வி - ரை.) இணையாரும் இல்லான்,
யாரும் இணையில்லான்
என மாறுக. உலகில் நன்றி மறப்பவரே மிகப்பலர்.
நன்றியை அறிந்து அந்நன்றிக்கேற்ற தம்மான்
இயன்ற உதவியைச் செய்வோர் மிகமிகச்சிலர்.
நளன் தன்னைக் கொடிய நெருப்பினின்றும் காத்த
உதவியை மறவாது, பின் நளனுக்கு வேண்டும்
நலங்குறித்துக் கவன்றவனாய் நளனைத் தீண்டி
அவன் தன் பகைவர்க்கு எளியனாயிராமல்
காண்டற்கரியனாய் இருத்தற்குத் தன் நஞ்சினால்
உருவை மாற்றியும், பின் அவன் தன் இயற்கை
உருவைப்பெற ஆடை வழங்கியும் தன் நன்றிமறவாக்
கடப்பாட்டைக் கடைப்பிடித்தொழுகிய
கார்க்கோடகன் விழுமிய சிறப்புத் தோன்ற ‘இணையாரும்
இல்லான்’ என்னும் அடைபுணர்த்துரைத்தார்.
இல்லான் : குறிப்புவினையாலணையும் பெயர். புணை -
பற்றுக் கோடு ; ஆதரவு. நளன் அக்காட்டைவிட்டுச்
செல்வதற்கு உதவியாகத் தனக்குத் துணையாக இருந்தன
அவன்றன் உண்மை உரைகளும் ஆடைகளுமேயாம். இவைகளே
தனக்குத் துணையாகக் கொண்டு சென்றானென்பாராய்
‘உதவிபுணையாக’ என்று சாதியொருமை கொடுத்துக்
கூறினார். தாய் சொற்றாங்கிக் கானஞ்
செல்லப்புறப்பட்ட கமலக் கண்ணனான இராமன்,
தனக்குத் துணையாகக் காட்டில் வாழ்தற்கு
உதவியாகக்கொண்டு சென்றவைகளைக் கம்பர்
குறித்தவை இக்கருத்தோடொப்ப இருத்தலானும்,
விழுமிய கருத்துச் செறிவுடைமையானும் அதனையும்
இதனோடொப்ப வைத்து மகிழ ஈண்டுக்
குறிக்கின்றாம்.
1‘தையல்தன் கற்பும்தன் தகவும் தம்பியும்
மையறு கருணையும் உணர்வும் வாய்மையும்
செய்யதன் வில்லுமே சேமம் ஆகக்கொண்
டையனும் போயினான் அல்லின் நாப்பணே”
என்பது காண்க. இதுபோன்றே இங்கே, ‘உதவிபுணையாக’
என்பதில் உம்மை விகாரத்தால்
மறைந்துநின்றதாகக் கொண்டு ‘உதவியும் புணையாக’
என்று எச்சவும்மையாக்கி, ‘உதவியும்’
என்றமையால் தன் அரிய பண்புகளான அருள் அன்பு
வாய்மை
1. கம்பராமா, தைல : 48.
|