பக்கம் எண் :

மூலமும் உரையும்447

றெடுத்து அதிலிருந்து வருகின்ற அழகிய விதர்ப்பநாட்டு வேந்தனான வீமன் திருமகளை, உறக்கத்தே நீத்தேனுக்கு - அவள் தூங்குங்காலத்தில் விட்டுவந்தவனாகிய எனக்கு, ஒன்று கூறாது இருத்தி - தேறுதலாக எனக்கொரு சொற்கூடச் சொல்லாமல் இருக்கின்றாய? (இது உனக்குத் தகுதியாகுமா? என்று கூறினான்.)

(க - து.)‘நாரையே ! நீ விதர்ப்பநாட்டு வேந்தன் மகளைத் தூக்கத்தில் விட்டுப்பிரிந்து வந்து வருந்துகின்ற எனக்கு ஓர் ஆறுதல் உரைகூட கூறாமல் வாளா இருக்கின்றாயே, இது ஏன் ?’ என்று நளன் வினாவினான் என்பதாம்.

(வி - ரை.) கொம்பு - மரக்கொம்பு. புன்னை முதலிய மரக்கிளைகள். ‘கொம்பார் இளங்குருகு’ என்பது சாதியடை. இளங்குருகு : அது தன்னந்தனியாகப் பிரிந்துவாழ இயலாத காதற் பருவமிக்க தென்னுங் குறிப்பிற்று. தன் பிரிவுபோன்று அதன் பிரிவை நளன் கருதினான். அறுகால் - ஆறுகால் : குறுக்கம் பெற்றது. வண்டுகளுக்கு ஆறுகால்கள் உள்ளன ஆதலால் ‘அறுகாலால்’ என்றார்.

1‘அறுகாற்பே டிசைபாடும் கூடல் மான்மியத்தை’

என்றார் பரஞ்சோதி முனிவரும். வண்டுகள் தேனுண்பதற்கு மலர்கள் தோறும் சென்று பாடிக்கொண்டு ஊதிக் காலால் மிதித்து மலர்களை நன்கு விரித்துத் தேனுண்பதியற்கை. இதைக் கூறுமுகத்தான் விதர்ப்பநாட்டுச் செல்வவளனும் நீர்நிலவளனும் குறித்தாராயிற்று. திறக்கத் தேனூறும் என்றமையால் விதர்ப்ப நாடு, பாணர்க்கும் புலவர்க்கும் இரவலர்க்கும் வேண்டிய வேண்டியாங்கு ஈந்து புரக்கும் தன்மையுடையது என்னும் கருத்துடை அடை அணிமிளிருதல் காண்க. பொன் - பொன் போன்றவள்; அல்லது திருமகள் போன்றவள் என்று கொள்க. (19)

நளன், வண்டுகளின் காதன்மை கண்டு கவலல்

353. புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்

டஞ்சினான் ஆவி அழிந்தான் அறவுயிர்த்து
நெஞ்சினான் எல்லாம் நினைந்து.

1. திருவிளையாடல், அவையடக்கம் : 5.