பக்கம் எண் :

448நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

(இ - ள்.) பொறிவண்டு புன்னை நறும்தாது கோதி - புள்ளிகளையுடைய ஆண் வண்டு புன்னைப் பூவின் நறுமணமுள்ள மகரந்தப் பொடியைக் கிண்டிவிட்டு, கன்னிபெடை உண்ண காத்து இருக்கும் - (தன் காதலியாகிய), பெண் இளவண்டு தேனை உண்ணும்வரை காத்துக்கொண்டிருக்கின்ற, இன் அருள்கண்டு - (அதன்) நல்ல பேரன்பினை நோக்கி, அஞ்சினான் - (நளமன்னன் தன்னிலையை யெண்ணி) அச்சங்கொண்டான், அறஉயிர்த்து நெஞ்சினாள் எல்லாம் நினைந்து ஆவி அழிந்தான் - மிகவும் பெருமூச்சுவிட்டு தன் மனத்தில் (தான் தமயந்தியை விட்டுவந்த செயலை) எண்ணியெண்ணி உயிர்வாடினான்.

(க - து.)தன் பெண் வண்டு தேனுண்பதைப் பார்த்துக்கொண்டு அது உண்ணுமட்டும் காத்திருக்கின்ற ஆண் வண்டின் பேரன்பு நிலையைப் பார்த்து நளன் தான் தன் மனையாளை வஞ்சித்துவந்த செயலை நினைந்து வருந்தினான் என்பதாம்.

(வி - ரை.) புன்னை யென்னும் முதற்பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காதலால் பொருளாகு பெயர். கோதுதல் - தன் வாயானும் கால்களானும் கிளைத்தல் (கிளறிவிடுதல்.

2‘குப்பை கிளைப்போவாக் கோழிபோல்’

என்பதூஉம் அது. பொறிவண்டு-தன் உடம்பெல்லாம் புள்ளிகள் பெற்ற ஆண் வண்டு. ‘பொறிவண்டு’ என்று ஈண்டுப் பொதுப் பெயராகக் கூறினாரேனும் ஒன்றொழி பொதுச் சொல்லாக ஆண் வண்டினைக் குறித்தது. மேல், ‘கன்னிப் பெடை’ என்றமையான். கன்னி - இளமை, கட்டழகுமாம்.

3‘கன்னி இளவாழை கனி ஈவ’

என்ற கம்பருரையும் இப்பொருட்டு. ஆண் வண்டு, தன் பெடை வண்டு தேன் உண்ணாது இருப்பதறிந்து தான் புன்னைப் போதைக் கிளைத்துக்கொடுத்து அதிலுள்ள தேனை அது பருகும்பரையும் காத்துக்கொண்டிருப்பதை
நளன் கண்டான் ; அதன் பேரன்பைத் தன் காதலிமாட்டுக்கொண்ட
வற்றாத இன்னருளைக் கண்டான் ; ஓர் அஃறிணைஉயிர். அது தன் காதலிபால் இவ்வாறான வானினுமுயர்ந்த அன்புகாட்ட நாம் கற்பித் சிறந்த காதலியை, ‘குற்றமில்...மைந்தரையும், பெற்றுக்கொளலாம் பெறலாமோ... கோக்காதலனைக் குலமகளுக்கு’ (கலிதொடர் : 66) என்று

2. நாலடியார் : 341. 3, கம்பரா, ஆரணிய, அகத்திய : 58.