|
கூறி, நிழல்போல் விடாது தன்னோடு
தொடர்ந்து வந்து கானில் ஆறுதலளித்த
அன்புக்கிழத்தியைத் - தன் ஆருயிர் மருந்தைத் -
தமயந்தியை - நாம் கொடுங் காட்டில், சிங்கம் புலி
கரடி பாம்பு பெரும்பேய் முதலிய கொடிய விலங்கும்
பிறவும் திரிதரும் அடவியில் ஆள் வழக்கற்ற
அருநெறியில் பாழ்மண்டபத்தில் விட்டுப்
பிரிந்தோமே, அதுவும் பகற்போதிலா! இரவிலன்றோ?
அவள் எந்நிலை எய்தினாளோ ! இவ்வண்டுக்குரிய
அன்பில் ஒரு கூறு என்பால் உளதா ! இல்லையே எனப்
பலப்பல எண்ணினான் ; தன் சீர்நிலை
திரிந்தமைக்கு அஞ்சினான் ; பெருமூச்செறிந்தான் ;
உயிரும் தளர்வுற்றது. இக்கருத்துக்களை யெல்லாம்
ஒரு கோவைப்படுத்தி ‘அஞ்சினான்.........எல்லாம்
நினைந்து’ என்றார். இக்கருத்தோடொப்பப்
பொருள்வயிற் பிரிந்து சென்ற தன் காதலனைத்
தலைவி நினைந்து வருந்துந் துறையில் ஐந்திணை
ஐம்பதில் அமைந்துள்ள பாடல் நினைக்கத் தக்கது.
பாலைவனம் ; அங்கு நீருமில்லை, நிழலுமில்லை ; ஆணும்
பெண்ணுமாகிய மான்கள் இரண்டு ; தப்பித்தவறி
இரைதேடி வந்து இப்பாலையில் கால்வைத்துவிட்டன.
கடும்பகல் ; பகலவன் தன் கதிர்களை நிலமெங்கும்
பரப்புகின்றான் ; நிலத்தில் கால்
பாவமுடியவில்லை ; அவை வெப்பந் தாங்கலாற்றது
தத்தளிக்கின்றன ; ஒன்ற நிழலில்லை ; ஒதுங்கப்
புதர்களுமில்லை ; நீர் வேட்கையும் மிகுந்தது.
நீர்தேடி அப்பாலையில் ஓடின ; தேடின ; கானலை
நீரெனக் கருதின ; ஓடி ஓடி இளைத்தன. இறுதியில் ஒரு
சிறுகுண்டு ; அதில் கலங்கலாகவுள்ள நீர் சிறிது
ஒட்டிக்கிடந்தது. அவைகள் கண்டன; ஆனால் அந்நீர்
ஒன்றுக்குக்கூடப் போதாத அளவு; இவை இரண்டு;
நீர்வேட்கையோ மிகுதி; ஆவலுடன் இரண்டும்
அந்நீர்ப் படுகரில் இறங்கின. ஆண் மான்
ஒன்று கருதிற்று. ‘நீரோ சிற்றளவு, நாம் கொண்ட
வேட்கையோ பேரளவிற்று. இதை இருவரும் எப்படிக்
குடிப்பது?’ என்று எண்ணிப் பெண்
மானை நோக்கி, ‘என் அன்பு ! நீர் சிறிது ; நம்
தாகம் பெரிது ; ஆகவே நீமட்டும் இதனைப் பருகு; நான்
வேறொரு நீர்நிலை கண்டு உண்பல்’ என்றது. பெடை, ‘அருளே
! நீ உண்டிலையேல் நானும் பருகலேன்’
என்று வருந்திக் கூறிற்று. பின் ஆண் மான் வேறொரு
கருத்துக்கொண்டது. நீரைக் குடியாமல் நீரைப்
பருகுவதுபோல் அதன்மீது வாயை வைத்துக்கொண்டு அது
குடிக்கும் மட்டும் இருப்பதென முடிபு செய்துகொண்டு, ‘உள்ள
ஒருமையே! வருக நாம் இருவேமும் நீருண்பேம்’ என்றது.
அதைப் பெடை உண்மையென நம்பிற்று. நீரைப் பருகத்
தொடங்கின ; ஆண் மான் தன் முடிபுப்படி நீர் பருகாது
வாயை வைத்தபடி நீர் குடிப்பதுபோல் பாசாங்கு
செய்துகொண்டிருந்தது. பெண் மான் நீர்
பருகித் தன் வேட்கை தணிந்தது. பின் நீரினின்று
தன் வாயை யெடுத்தது. பின்னரே எஞ்சிய சேறுகலந்த
கலங்கலை ஒரு சிறிது உறிஞ்சிக்
ந. - 29
|