|
குடித்தது ஆண் மான். இக்கருத்தை
உள்ளடக்கியதே இதன் கீழ் வருவது.
இவைகளோடொத்ததே இவ்வண்டுகளின் அன்பும்.
1‘சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி’
இந்நிலை கண்டே நளன், தான்
காதலிக்கிழைத்த தீமையெனக் கருதினான். தான்
பிரிந்துவந்த நிலையையெனக் கொள்க. (20)
நளன், கடற்கரையிலுள்ள நண்டினைக் கண்டு
கூறுதல்
354. காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ உரை.
(இ - ள்.) (நளன் அங்கு வந்த
நண்டொன்றை நோக்கி) அலவ - ஓ நண்டே ! நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கு ஓடி ஒளிக்கின்றது -
பேரோசை தரும் அலைகளையுடைய கடற்கரை ஓரத்தில்
நீ சென்று உன் வளைக்குள் புகுந்து
ஒளித்துக்கொள்ளுதல், காதலியை கார் இருளில்
கானகத்தே கைவிட்ட - தன் மனைவியைக் கரிய
நள்ளிரவில் கடிய காட்டில் கைவிட்டுப்பிரிந்து
வந்த, பாதகனை பார்க்கப்படாது என்றோ -
இப்பாவியைப் பார்த்தல் தகாதென்ற காரணமோ ?
என்னோ உரை - வேறு என்ன காரணமோ ? (நான்
அறியக்)கூறு.
(க - து.)நளன் அங்கோடிய
நண்டொன்றைப் பார்த்து, ‘நண்டே ! என்னைக்கண்டு
உன் வளைக்குள் ஒளிந்துகொள்கின்றாயே, காதலியை
நடு இரவில் கொடிய காட்டில் விட்டுப்பிரிந்து
வந்த இப்பாவியைப் பார்க்கக் கூடாதென்றா ? வேறு
என்ன காரணமோ ? சொல்லு’ என்றான் என்பதாம்.
(வி - ரை.) ‘நின் பிரிவினும்
சுடுமோ கொடுங்காடு’ என்று கூறிக் கார்முகில்
வண்ணனைத் தொடர்ந்துவந்த மிதிலைப்
பொன்னையொப்பத் தன் காதற் கணவனைத்
தொடர்ந்துவந்த
1. ஐந்திணை ஐம்பது : 38.
|