பக்கம் எண் :

மூலமும் உரையும்451

தமயந்தியின் உள்ளன்பை விளக்க வேறு பெயர்களாற் கூறாது ‘காதலியை’ என்றான். பகற்பொழுதாயினும் ஆகலாம் இரவுப் பொழுது என்பானாய், அதினும் நிலவொளி இல்லாத பேரிருள் என்பானாய்க் ‘காரிருள்’ என்றான். ஆள் அரவமற்றது; புலியுங் கரடியும் போதரும் இடம்; அஞ்சாநெஞ்சம் அஞ்சும் தன்மையதாம் என்பானாய்க் ‘கானகத்தே’ என்றான். இவ்வளவு கொடிய நிலைகள் அடுக்கடுக்காக இருந்தும் அவைகளைக் கருத்திற்கொள்ளாது தமயந்தியைத் தனித்துவிட்டுவந்த தன் செயலைக் ‘கைவிட்ட’ என்றான். இவ்வளவு நிலையை அறிந்திருந்தும், பெண்மை உள்ளம் இக்கொடுமைகளைத் தாங்காது என்பதை நன்குணர்ந்து விட்டுவரத் துணிவது நல்லியல்புடையார்க்குச் சாலாதென்பான் தன்னிலையையே வெறுத்துக் கூறுவானாய்ப் ‘பாதகனை’ என்றான். இதுகாறும் நளன் தன்னிலை பற்றி வருந்திய திறம் உணர்த்தினார் ஆசிரியரென்க.

‘காதலியை.........கைவிட்ட’ எனத்தொடர்ந்து வருவது முற்றுமோனைத் தொடை நயம் தோன்ற நின்றமை அறிக. நாதம் - கடலலை ஓசை. அலவன் - நண்டு. அலவ என விளிவேற்றுமையால் ஈற்று னகரம் குறைந்தது. ஒன்றில் கருத்து வைத்தாரொருவர்க்குக் காண்பனவெல்லாம், தாம் கொண்டதே தோன்றுவது மனவியல்பு. மக்களையோ பிறவற்றையோ கண்ட நண்டு, கண்டவுடன் ஓடி, தன் வளைக்குள் மறைவது இயற்கை. அம்முறையில் நளன் கடற்கரை போந்தபோது நண்டு தற்செயலாக ஓடி ஒளிக்க, அதைக்கண்டு தன்னிலையை அதனோடு கழறினான் என்க. (21)

நளன், கருங்குவளை முதலியவற்றோடு கூறதல்

355. பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலுவும்
கானலே வேலைக் கழிக்குருகே - யானுடைய
மின்னிமைக்கும் பூணாளவ் வீங்கிருள்வாய் ஆங்குணர்ந்தால்

என்னினைக்கும் சொல்வீர் எனக்கு.

(இ - ள்.) (நளனானவன்) பானலே - கருங்குவளைகளே ! பசும் தென்றல் வந்து உலவும் சோலை கானலே - குளிர்ந்த தென்றற் காற்று வந்தசைசின்ற சோலைகளையுடைய கடற்கரையே !; வேலை கழிகுருகே - கடற்கரையே அடுத்த உப்பங் கழிகளில் வாழும் நாரையே!, யான் உடைய மின் இமைக்கும் பூணாள் - நான் (மணந்து என்) மனையாளாம் உரிமை பூண்ட ஒளியெறிக்கும் அணிகளணிந்த தமயந்தியானவள், ஆங்கு அவ்வீங்கு இருள்வாய் உணர்ந்தால் - அக்கொடுங்காட்டில் அந்நள்ளிருட்